ஆன்-லைன் வர்த்தகம்
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் செயலாளர் என்.ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆனால் ‘ஆன்-லைன்’ வர்த்தகத்தில் பல்வேறு மருந்து வணிகர்கள் சார்பில் இருமல் மருந்து, தூக்க மாத்திரை, வயாகரா உள்ளிட்ட பல்வேறு வகையான மருந்துகளை மருந்துச்சீட்டு, அங்கீகாரம் இல்லாமல் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோன்று தடை செய்யப்பட்ட மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நாங்கள் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
வேலை நிறுத்த போராட்டம்
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பொதுமக்களின் நலன் மற்றும் எங்களின் நலன் கருதி இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதையடுத்து அன்றைய தினம் நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகள் மூடப்படும். தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் மருந்து கடைகள் மூடப்படும்.
ஆகவே வாடிக்கையாளர்கள் மற்றும் நோயாளிகள் முன்னதாகவே அவசர சமயத்திற்கு தேவையான மருந்துகளை வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








