Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Home
Unlabelled
அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை? தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் எத்தனை? தகவல்களை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.
அரசுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளின் விவரங்களை அட்டவணை வடிவில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், சென்னை உயர்நீதிமன்றத்தின் துணைப் பதிவாளரிடமிருந்து (நிர்வாகம்) அரசு அதிகாரிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் குறித்த தகவல்களை கேட்டுப் பெற்றேன்.
அதில், 2010 முதல் 2014 பிப்ரவரி வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் 12,527 வழக்குகளும், 2014 அக்டோபர் வரை மதுரை கிளையில் 8,475 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. மேலும், அரசு அதிகாரிகளுக்கு எதிராக இரு நீதிமன்றங்களும் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றாமல் உள்ளது. மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், உரிய அரசு அதிகாரிகள் ஆஜராவது இல்லை. எனவே, வழக்கில் அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறும், அவர்களை சட்டப்படி தண்டிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கெüல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் ஏற்கெனவே தாக்கல் செய்த ஒரு மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலர்
2014-ஆம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இதில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உத்தரவுகளை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் மேல்முறையீடு செய்யலாம்.
இந்த உத்தரவைச் செயல்படுத்தத் தவறினால் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஓராண்டாகியும், இந்த விஷயம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என அரசு தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார். ஆனால், ஏராளமான அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி நிலவரப்படி, சுற்றறிக்கையின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை, நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை, முடித்து வைக்கப்பட்டுள்ள வழக்குகள், அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்பது உள்ளிட்ட விவரங்களை அட்டவணை வடிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கு விசாரணை நவம்பர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








