சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு: சைதை துரைசாமியின் மனிதநேய மையம் இலவச பயிற்சி அளிக்கிறது விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம்:
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையம்
இலவச பயிற்சி அளிக்கிறது. விரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர்
சைதை துரைசாமி நடத்தும் மனித நேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மையம்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சிவில் சர்வீசஸ் தேர்வு
மத்திய அரசு தேர்வாணையத்தால் கடந்த ஆகஸ்டு மாதம் 23–ந் தேதி
நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வில், மனிதநேய பயிற்சி மையத்தில் 127
மாணவ–மாணவிகள் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 54 மாணவிகள், 73 மாணவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதல்நிலை தேர்வில், தேர்ச்சி
பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும், முதன்மை தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள்
இலவசமாக தொடர்ந்து நடத்தப்பட உள்ளன. மனிதநேயத்தில் பயிற்சி பெறாத பிற
மாணவர்களும் இப்பயிற்சியில் கலந்து பயன்பெறலாம். இப்பயிற்சியில்
கலந்துகொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவிகள், தங்களுடைய
‘பாஸ்போர்ட்’ அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு
ஆகியவற்றுடன் சென்னை சி.ஐ.டி.நகர், முதல் பிரதான சாலையில் உள்ள மனிதநேயம்
ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா பயிற்சி மைய அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்து
கொள்ளலாம்.
அனைத்தும் இலவசம்
முதன்மை தேர்வுக்கு பதிவு செய்துகொள்ளும் அனைவருக்கும் இலவச பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த எழுத்து தேர்வுக்கான பயிற்சி வகுப்பில்
கலந்துகொள்ள விரும்பும் அனைத்து தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும்
தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து வசதி, தினசரி செய்திதாள்கள் (தமிழ்,
ஆங்கிலம்), பாட குறிப்புகள் போன்ற வசதிகள் அனைத்தும் இலவசமாக செய்து
தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







