Fake universities on the need to take immediate action : the state governments to UGC: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


Fake universities on the need to take immediate action : the state governments to UGC:

போலி பல்கலைக்கழகங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு யுஜிசி வேண்டுகோள்: 
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சார்பில் வெளியிடப்பட்ட போலி பல்கலைக்கழகங்கள் மீது, அந்தந்த மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது.2015-ஆம் ஆண்டில் ஜூலை 21-ஆம் தேதியன்று 21 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை யுஜிசி வெளியிட்டது.இந்த நிலையில், இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது கேட்டுக்கொண்டுள்ளது.இதுகுறித்து மாநில தலைமை செயலர்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள கடித விவரம்:
 பட்டியலில் இடம்பெற்றுள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி சார்பில் அனுப்பப்பட்ட கடிதங்கள், முகவரி தவறு எனத் திரும்பிவந்துள்ளன.
 இதனால், அந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வேறு முகவரியில் செயல்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் மாணவர்கள் அந்தப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து ஏமாந்து போகும் நிலை உருவாகும்.
 எனவே, பட்டியலில் இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்களை மூடுவதற்கான நடவடிக்கையை அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை தொடர்பான தகவலையும் யுஜிசி-க்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்: உத்தரப் பிரதேச மாநிலம்: அலாகாபாத் மகளிர் கிராம வித்யா பீடம், அதே நகரில் அமைந்துள்ள காந்தி ஹிந்தி வித்யா பீடம், கான்பூர் ஹோமியோபதி நேஷனல் பல்கலைக்கழகம், அலிகரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் திறந்தநிலை பல்கலைக்கழகம், மதுராவில் உள்ள உத்தரப் பிரதேஷ் விஷ்வ வித்யாலயா, பிரதாப்கரில் உள்ள மஹாராணா பிரதாப் சிக்ஷா நிகேதன் விஷ்வ வித்யாலயா, நொய்டாவில் உள்ள இந்திரபிரஸ்த சிக்ஷா பரிஷத், மதுராவில் உள்ள குருகுல விஷ்வ வித்யாலயா, விருந்தாவன்.
 தில்லி: வாராணசி சம்ஸ்கிருத விஷ்வ வித்யாலயா, தரியாகஞ்ச் பகுதியில் உள்ள வணிகவியல் பல்கலைக்கழக நிறுவனம், யுனைடெட் நேஷன்ஸ் பல்கலைக்கழகம், வொக்கேஷனல் பல்கலைக்கழகம், ஏடிஆர் சென்ட்ரிக் ஜுரிடிக்கல் பல்கலைக்கழகம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங்.
 தமிழகம்: திருச்சி புதூரில் உள்ள டி.டி.பி. சம்ஸ்கிருத பல்கலைக்கழகம்.
 பிகார்: தர்பங்கா பகுதியில் உள்ள மைதிலி பல்கலைக்கழகம்.
 கர்நாடகம்: பெல்காமில் உள்ள படகான்வி சர்க்கார் வேர்ல்ட் திறந்தநிலை பல்கலைக்கழகம்.
 கேரளம்: கிஷநத்தத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம்.
 மத்தியப் பிரதேசம்: ஜபல்பூர் கேசர்வானி வித்யா பீடம்.
 மகாராஷ்டிரம்: நாக்பூர் ராஜா அரபிக் பல்கலைக்கழகம்.
 மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேடிவ் மெடிசின் ஆகியவையே அந்தப் போலி பல்கலைக்கழகங்கள்.


Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H