சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 3-ஆம் கட்ட விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு கலந்தாய்வில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வழக்கு என்ன? அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்களில் தாங்கள் விண்ணப்பித்துக் காத்திருப்பதால், கலந்தாய்வில் அனுமதித்து அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர தங்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு சேர்க்கைக் கடிதம் அளிக்குமாறு உத்தரவிடக் கோரி இரண்டு மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 3-ஆம் கட்ட விரிவுபடுத்தப்பட்ட கலந்தாய்வில் பங்கேற்று தேர்வான 431 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்படாமல் இருந்தது.
தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கு புதன்கிழமை (அக்டோபர் 7) தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, கலந்தாய்வில் தேர்வான 431 மாணவர்களுக்கும் உடனடியாக சேர்க்கைக் கடிதம் வழங்குமாறு, உரிய கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தமிழக மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் உஷா சதாசிவம் மின்னஞ்சலில் தகவல் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டு, புதன்கிழமை இரவே அவர்கள் கல்லூரியில் சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.








