வழியில் படிப்பதாக அரசு அறிவித்தது.ஆனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களும், தமிழ் வழிக்கல்வி மாணவர்களும், ஒரே வகுப்பறையில் படிக்கும் நிலை, ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும் நிலை, ஆங்கிலவழிக்கல்வி ஏ.பி.எல்., கார்டு வழங்காமை உள்ளிட்டவைகளால், ஆங்கிலவழிக்கல்வி மாணவர்களுக்கும், தமிழ்வழிக்கல்வி மாணவர்களுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாத நிலை உள்ளது.
ஆங்கிலவழிக்கல்விக்கு தனியாக ஆசிரியர் நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இருந்த உபரி ஆசிரியர்களால், அது முடியாமல் போனது. இதனால், கடந்த இரு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி பெரிதாக, பெற்றோரை ஈர்க்கவில்லை. ஆசிரியர்கள், தங்கள் வருகை பதிவேட்டில் மட்டுமே, ஆங்கிலவழிக்கல்வியாக பராமரித்து வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளில் மேலும், 3,500க்கும் மேற்பட்ட பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வி துவக்கப்பட்டும், ஒரு லட்சம் மாணவர்களின் எண்ணிக்கையை தாண்டவில்லை.
ஆங்கிலவழிக்கான ஆசிரியர்களோ, கற்பித்தல் உபகரணங்களோ வழங்காத நிலையில், ஆங்கிலவழியில் மாணவர்களை சேர்க்க, ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக்கல்வியும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.








