தமிழக அரசு சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 14 வகையான இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. 2011 - 12ல் இந்த திட்டங்கள் அறிமுகமான போது, பள்ளிகள் திறந்தவுடன் இலவச பொருட்கள் வழங்கப்பட்டன. அதனால், கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர் பயனடைந்தனர்.
வழங்கப்பட்டன.இந்த ஆண்டும், இலவச பொருட்களின் வினியோகம் இதுவரை துவங்கவில்லை. பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் மற்றும் சீருடை மட்டுமே இதுவரை
வழங்கப்பட்டுள்ளன.கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள், 'கிரயான்ஸ்' வண்ணக் குச்சிகள், புத்தகப் பை, காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை.
அதனால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில், இருப்பில் மீதமிருந்த பொருட்கள் மட்டும், சில பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, பெற்றோர் மற்றும் ஆசிரியர் சிலர் கூறியதாவது:இலவச பொருட்களில், 'லேப் - டாப்' மற்றும் சைக்கிள் கொடுப்பதில் மட்டும் அதிகாரிகள் அதிக அக்கறை காட்டுகின்றனர். எனினும், இவை கள்ள சந்தையில் விற்பனைக்கு வந்து விடுகின்றன.
தொடக்க பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிக மாணவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு பயன்படும் பொருட்களை மிக தாமதமாகவே அரசு வழங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.








