புதுக்கோட்டையில் இன்று மாலை நடக்கிறதுமார்ச்2015-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளிகள் மற்றும் தாங்கள் கற்பித்த பாடங்களில் 100 சதவீத தோ்ச்சி மற்றும் 100க்கு100, 200க்கு 200 பெற்றுத்தந்த ஆசிரியா்கள், மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியா் விருதுபெற்ற ஆசிரியர்கள், மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் மாணவ. மாணவிகளை சாதனை பெறச்செய்த உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் ஆகியோர்களுக்கு பாராட்டு விழா புதுக்கோட்டை பள்ளிக்கல்வித்துறையின்சார்பில்இன்று 09-10-2015 மாலை 3.00 மணியளவில் புதுக்கோட்டை மவுண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் நடக்கிறது.
விழாவிற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சு.கணேஷ் தலைமை தாங்குகிறார். விழாவிற்கு வருகைதரும் அனைவரையும் மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலா் திருமதி செ.சாந்தி வரவேற்று பேசுகிறார். இவ்விழாவில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மாண்புமிகு ந.சுப்ரமணியன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநல்வாழ்வுத்துறை அமைச்சா் மாண்புமிகு டாக்டா் சி.விஜயபாஸ்கா் ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டு பெறும் ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி விழாப்பேரூரை ஆற்றுகிறார்கள். இவ்விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினா் திரு ப.குமார், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினா் வி.ஆா்.கார்த்திக்தொண்டைமான், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினா் திரு கு.ப. கிருஷ்ணன், திருமயம் சட்டமன்ற உறுப்பினா் திரு பி. கே. வைரமுத்து, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினா் திரு மு. ராஜநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசுகிறார்கள். இந்த விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவா் திரு வி.சி.ராமையா, புதுக்கோட்டை நகராட்சித்தலைவா் திரு ரா.ராஜசேகரன், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவா் திரு ஆா்.சந்திரன், புதுக்கோட்டை நகராட்சித்துணைத்தலைவா் திரு எஸ்.ஏ.எஸ். சேட்(எ) அப்துல்ரஹ்மான், 40-வது வார்டு நகராட்சி உறுப்பினா் திருமதி ஈஸ்வரிநடராஜன், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலா் திரு க.கணேசன், புதுக்கோட்டை மாவட்டஆசிரியா்கல்வி மற்றும்பயிற்சிநிறுவனமுதல்வா்(பொ) திரு நா.செல்லத்துரை, புதுக்கோட்டை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் திரு அ.ஜேக்கப், புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலா் திரு மா.தமிழ்செல்வன், அறந்தாங்கி கல்வி மாவட்ட மாவட்டக்கல்வி அலுவலர் திரு ஆா்.சண்முகம், மவுண்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளா் திரு ஜெயபாரதன்செல்லையா, ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். இவ்விழாவில் மாநில மற்றும் தேசிய அளவில் நல்லாசிரியா் விருது பெற்ற 14 ஆசிரியா்கள். பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற 102 பள்ளிகளின் தலைமையாரியா்கள், பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற 23 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 100 சதவீத தோ்ச்சி மற்றும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுத்தந்த 1093 பட்டதாரி ஆசிரியா்கள், 100 சதவீத தோ்ச்சி மற்றும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுத்தந்த 383 முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள்.மாநில,தேசியஅளவிலானவிளையாட்டுப்போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க செய்து வெற்றி பெறச்செய்த 37 உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள்,ஆகியோர்களுக்குசான்றிதழ்வழங்கிகௌரவிக்கப்படஉள்ளது. இவ்விழாவிற்கானஏற்பாடுகளைமாவட்டமுதன்மைக்கல்விஅலுவலா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள10க்கும் மேற்பட்ட குழுவினா் சிறப்பாக செய்து வருகிறார்கள்.








