மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், வெங்கப்பாக்கம், மணமை,
பி.வி.களத்தூர், சட்ராஸ், பாண்டூர், புதுப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில்
உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ்–2 படிக்கும்
மாணவ– மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மடிக்கணினி வழங்கும்
விழா நடந்தது. இதற்கு மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் எம்.கோதண்டபாணி,
திருக்கழுக்குன்றம் ஒன்றிய குழுத்தலைவர் புஷ்பா ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை
வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். இதில்
காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தண்டரை கே.மனோகரன்
எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 8 பள்ளிகளை சேர்ந்த பிளஸ்–2 பயிலும் மாணவ–
மாணவிகள் 1,055 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
இந்த
நிகழ்ச்சியில் செய்யூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.ராஜ், ஒன்றிய குழு துணைத்தலைவர்
விஜயரங்கன், மாவட்ட கவுன்சிலர் வி.பக்தவச்சலம், முன்னாள் பேரூராட்சி தலைவர்
வேலாயுதம், முள்ளிகுளத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜி.கே.பாபு,
திருப்போரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் டி.டி.மோகன் மற்றும்
பலர் கலந்து கொண்டனர்.







