துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 74 காலிப்பணியிடங்களுக்கான
குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் 725 மையங்களில் நேற்று
நடைபெற்றது.
குரூப்-1 முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 19 துணை கலெக்டர், 26 துணை போலீஸ் சூப்பிரண்டு, 8 மாவட்ட பதிவாளர், 21 வணிகவரி உதவி ஆணையர் என மொத்தம் 74 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி வெளியானது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்டு 9-ந்தேதி கடைசி நாளாக
அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி, தமிழகம் முழுவதிலும்
இருந்து 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.குரூப்-1 முதல்நிலை தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் காலியாக உள்ள அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 19 துணை கலெக்டர், 26 துணை போலீஸ் சூப்பிரண்டு, 8 மாவட்ட பதிவாளர், 21 வணிகவரி உதவி ஆணையர் என மொத்தம் 74 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி வெளியானது.
இந்த நிலையில், இந்த காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
74 காலிப்பணியிடங்கள்
சென்னை திருவல்லிக்கேணி என்.கே.டி. மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி பார்வையிட்டார். அவருடன் செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுபாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோரும் உடன் இருந்தனர்.
குரூப்-1 முதல்நிலை தேர்வை பார்வையிட்ட பிறகு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர் போன்ற பதவிகளில் காலியாக இருந்த 74 பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 2 பேர் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டது.
725 மையங்களில்...
மீதமுள்ள 2 லட்சத்து 14 ஆயிரத்து 796 பேர் இந்த காலிப்பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழகம் முழுவதும் 725 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 126 மையங்களில் 40 ஆயிரத்து 668 பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள்.
இந்த தேர்வை கண்காணிப்பதற்கு 10 ஆயிரத்து 740 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கான ‘கீ-ஆன்சர்’ விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளும் விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அருள்மொழியிடம், குரூப்-4 தேர்வு அறிவிப்புகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு அவர், ஏற்கனவே அறிவித்தப்படி, குரூப்-2 தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந்தேதி நடைபெற உள்ளது. குரூப்-4-க்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று பதிலளித்தார்.
கடினமாக இருந்தது
இதுகுறித்து குரூப்-1 முதல்நிலைத்தேர்வு எழுதிய மாணவன் குமார் கூறுகையில், ‘‘குரூப்-1 முதல்நிலை தேர்வு கடினமாகத்தான் இருந்தது. சமீபகால நிகழ்வுகள் குறித்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளை விரும்பி பார்த்து வருபவர்களுக்கு நிச்சயம் இந்த தேர்வு எளிதாக இருக்கும்’’, என்றார்.