ஐ.ஐ.டி.யில் சேர ஒரு முறை மட்டுமே நுழைவுத்தேர்வு; வல்லுனர்கள் குழு சிபாரிசு
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர ஒருமுறை மட்டுமே தேர்வு நடத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தற்போது மெயின், அட்வான்ஸ்ட் என்னும் 2 வித நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சமீப காலமாக ஐ.ஐ.டி. நிறுவனங்களில் படிக்க மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சி மையங்கள் அதிகரித்து விட்டன. இதனால் மாணவர்கள் இந்த மையங்களை சார்ந்திருக்கவேண்டிய கட்டாய சூழலும், ஐ.ஐ.டி. கல்வியின் மீது மாணவர்களுக்கு உண்மையான ஆர்வமும் குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
பரிந்துரை குழு அமைப்புஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர ஒருமுறை மட்டுமே தேர்வு நடத்துவதற்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.
ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு
ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தற்போது மெயின், அட்வான்ஸ்ட் என்னும் 2 வித நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது.
சமீப காலமாக ஐ.ஐ.டி. நிறுவனங்களில் படிக்க மாணவர்களை தயார்படுத்தும் பயிற்சி மையங்கள் அதிகரித்து விட்டன. இதனால் மாணவர்கள் இந்த மையங்களை சார்ந்திருக்கவேண்டிய கட்டாய சூழலும், ஐ.ஐ.டி. கல்வியின் மீது மாணவர்களுக்கு உண்மையான ஆர்வமும் குறைந்துவிட்டதாக கருதப்படுகிறது.
இந்த நிலையை மாற்றி ஆர்வத்துடன் மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் சேர்ந்து படிக்கும் வகையில் நுழைவுத் தேர்வு முறையில் மாற்றங்களை செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக பேராசிரியர் அசோக் மிஸ்ரா தலைமையில் வல்லுனர்கள் கொண்ட பரிந்துரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.
அண்மையில் இந்த குழு தனது அறிக்கை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது.
அதில் முக்கியமாக பரிந்துரைக்கப்பட்டு உள்ள அம்சங்கள் வருமாறு:-
3 முறை திறனறித் தேர்வு
நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திறனறித் தேர்வை நடத்த ‘தேசிய சோதித்தல் சேவை’ என்னும் அமைப்பை ஏற்படுத்து அவசியம். 2016-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.
இந்த அமைப்பு மூலம் மாணவர்களின் அறிவியல் திறன், கண்டுபிடிப்பு சிந்தனைகள் ஆகியவற்றுக்கு திறனறித் தேர்வு நடத்தலாம். இந்த தேர்வை இணைய தளம் வாயிலாக ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடத்தலாம்.
வாரிய மதிப்பெண் தேவையில்லை
இதில் திறமையை வெளிப்படுத்தும் 4 லட்சம் மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு நுழைவுத் தேர்வை நடத்தலாம். அதில் இருந்து 40 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து ஐ.ஐ.டி. மற்றும் என்.ஐ.டி. ஆகியவற்றில் அனுமதிப்பதற்கான ‘ரேங்க்’கை நிர்ணயிக்கலாம். அதன்படி கலந்தாய்வை நடத்தலாம்.
தவிர, பள்ளிக்கல்வி வாரியத் தேர்வுகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை இந்த சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளத் தேவையில்லை.
இந்த தேர்வு முறை மூலம் ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை பயிற்சி மையங்கள் தயார் படுத்தப்படுவது தடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஒரு முறை மட்டுமே...
இந்தக்குழுவின் பரிந்துரைகளை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்றுக் கொண்டால் மெயின் மற்றும் அட்வான்ஸ்ட் ஆகிய தேர்வுகள் ஒன்றாக இணைக்கப்பட்டு 2017-ம் ஆண்டு முதல் ஒரு முறை மட்டுமே ஐ.ஐ.டி.யில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த பரிந்துரைகள் மீது விரிவான ஆலோசனைகளை பொது மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டு இருக்கிறது. அதில், 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டது போலவே 2016-ல் ஐ.ஐ.டி. அட்வான்ஸ்ட் தேர்வுகள் நடத்தப்படவேண்டுமா? என்றும் கேட்கப்பட்டு உள்ளது.