அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கல்வித்தர மேம்பாட்டு ஊதியம்,
நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்படாததால், 7,000 பேராசிரியர் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேராசிரியர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும்.
இவர்கள், பி.எச்டி., முடித்தால், மூன்று ஆண்டுக்கு பின்,
எம்.பில்., முடித்தால், நான்கு ஆண்டுக்கு பின், மற்றவர்களுக்கு, ஐந்து
ஆண்டுக்கு பின், தர மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும். ஆசிரியர் தேர்வு
வாரியமான, டி.ஆர்.பி., மூலம், 2007ல், அரசு கல்லுாரிகளில், 4,000 பேர்,
அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,000 பேர் தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் மற்றும், 140 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உள்ளன; இவற்றில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு, சம்பளம் தவிர்த்து, கல்வித்தர ஊதியம் கூடுதலாக வழங்கப்படுகிறது.இவ்வாறு, பேராசிரியர்களுக்கு, மாதம், 6,000 ரூபாய் வழங்கப்படும்.
பேராசிரியராக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு, 2011 முதல், மாதம் தோறும், 7,000 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 6,000 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது.
கடந்த ஏப்ரலில், நிலுவை தொகையை வழங்க, உயர் கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது. ஆனால், அமலுக்கு வரவில்லை. அரசு கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலர் சிவராமன், ''4 ஆண்டுகளாக ஊதியம் பாக்கி உள்ளதால், பேராசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்,'' என்றார்.