மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளதன் காரணமாக ஏற்கெனவே ஒத்திவைத்து
மறுதேதி அறிவித்த தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம்
மறுபடியும்ஒத்திவைத்துள்ளது.சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடந்த
நவம்பர் 8-ஆம் தேதி முதல் தொடர் மழை பெய்தது.
இதனால்
பல பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை
பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாப்
பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறுப் பல்கலைக்கழகங்கள்தேர்வுகளை ஒத்திவைத்து,
பின்னர் மறு தேதிகளை அறிவித்தன.நவம்பர் 9-ஆம் தேதி முதல், 28-ஆம் தேதி வரை
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 1-ஆம் தேதி முதல், 14-ஆம் தேதி வரை
நடத்தப்படும் என சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கெனவே
அறிவித்திருந்தது.இந்நிலையில், திங்கள்கிழமை முதல் சென்னை உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
தொடர்ந்து,
3 நாள்களுக்கு மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்
தெரிவித்தது.இதன் காரணமாக, டிச.1, 2-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளை
மீண்டும் ஒத்திவைத்து சென்னைப் பல்கலைக்கழகம், திங்கள்கிழமை (நவ.30)
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான மறுத் தேதிகள் பின்னர்
அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.