
ஒலக்கூர் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊராட்சி ஒன்றிய மற்றும் நிதி உதவி
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்
ஒருங்கினைந்து "மாணவர் நலன் ஆசிரியர்கள் இயக்கம்" என்ற அமைப்பின் மூலம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கினர்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மரக்காணம்,மற்றும் அதனை சுற்றியுள்ள தாழங்காடு,திருக்கனூர்,எக்கியர் குப்பம்,புதுப்பாக்கம்,வசவன்குப்பம்,கைப்பானிகுப்பம்,மண்டவாய்புதுக்குப்பம்,
கழிக்குப்பம், முன்னூர், மேல்பாக்கம் உண்டு உரைவிடப்பள்ளி என பத்திற்க்கும் மேற்ப்பட்ட கிராமப்புற பள்ளிகளில் பயிலும் சுமார் 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் நோட்டுபுத்தகங்கள்,எழுதுபொருட்கள், தட்டுகள்,உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது..மேலும் முன்னூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு அரிசி,பாய்,போர்வை,பாத்திரங்கள் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது...








