தமிழகத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டில் அஞ்சலகங்கள் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் உள்ள சாஸ்திரி பவன், ஐஐடி வளாகம், கல்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், செஞ்சி, வில்லியனூர், செங்கம், திருவத்திபுரம் ஆகிய 8 அஞ்சலகங்களில் இந்த வசதி நடைமுறையில் உள்ளது.
பெயர் மாற்றம்: தற்போது, தமிழகத்தில் உள்ள 94 தலைமை அஞ்சலகங்களில் 32 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது. சென்னை சாஸ்திரிபவன் அஞ்சலகத்தில் மட்டும் ரயில் டிக்கெட் விற்பனை மூலம் ரயில்வேக்கு ரூ.35 லட்சமும், அஞ்சல் துறைக்கு ரூ.60,000 முதல் ரூ.65,000 வரையும் வருமானம் கிடைத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்களான பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா (டதஅஈஏஅச ஙஅசபதஐ ஒஉஉயஅச ஒவஞபஐ ஆஐஙஅ) என்ற திட்டத்தை பிரதமர் சுடர் ஒளி காப்பீடுத் திட்டம் என்றும், பிரதம மந்திரி சுரக் ஷா பீமா (டதஅஈஏஅச ஙஅசபதஐ நமதஅஓநஏஅ ஆஐஙஅ) என்ற திட்டத்தை பிரதமர் நட்சத்திர பாதுகாப்புத் திட்டம் என்றும், அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அடல் பென்ஷன் திட்டம் என்றும் தமிழில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பிரதமர் நட்சத்திர பாதுகாப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெற முடியும். சென்னை மண்டலத்தில் இதுவரை இந்தத் திட்டத்தில் 25 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர் என அஞ்சல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








