இப்போது Done என்பதை கிளிக் செய்து அடுத்த Partition-ஐ உருவாக்குங்கள்.
நிறுவிய செயலியை திறவுங்கள். இப்போது இந்த செயலி ஆனது Root Permission என்று கேட்கும். அதற்க்கான அனுமதியை வழங்குங்கள்.
இப்போது Link2SD செயலியின் உதவியுடன் நீங்கள் கணணி மூலம் உங்களது SD
Card-இல் உருவாக்கிய “.ext” Partition-ஐ (அதாவது RAM-க்கான Partition)
உங்களது ஸ்மார்ட் போனின் மெமரி உடன் இணையுங்கள்.
இதுவரை நீங்கள் உங்களது ஸ்மார்ட் போனில் உபயோகிக்கும் SD Card-ஐ RAM-க்கு
தேவையான அளவு Memory அளவு உடன் Partition செய்து அதை உங்களது ஸ்மார்ட்
போனின் Internal மெமரி உடன் இணைத்து விட்டீர்கள்.
அடுத்ததாக உங்களது ஸ்மார்ட் போனில் புதிதாக சேர்க்கப்பட்ட Internal மெமரி-யை எப்படி RAM மெமரி உடன் இணைப்பது என்று பார்ப்போம்.
இதற்கு
Swapper For Root எனும் செயலியை உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவிக்கொள்ளுங்கள்.
நீங்கள் வழங்கும் RAM மெமரி-யின் அளவு நீங்கள் கணணி மூலம் உருவாக்கிய Partition-இன் மெமரி அளவை விட குறைவாக இருக்க வேண்டும்.
இறுதியாக Save என்பதை கிளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான். இப்போது உங்கள் ஸ்மார்ட் போனை ஒரு முறை Restart செய்து
விட்டு செட்டிங்க்ஸ் சென்று பாருங்கள். அங்கே உங்களது ஸ்மார்ட் போனின் RAM
அதிகரிக்கப்பட்டிருப்பதை காணலாம்.
குறிப்பு
இந்த முறையில் உங்களது ஸ்மார்ட் போனின் RAM-ஐ அதிகரிப்பதானது மிகவும்
Advance ஆன ஒன்றாகும். உங்களுக்கு இது பற்றிய முழுமையான தெளிவு
இல்லையென்றால் இதை முயற்சிக்காமல் இருப்பதே சிறந்தது.
இந்த பதிவை நான் எழுதியது, Android போன் செட்டிங்க்ஸ்-ஐ ஹேக் செய்து
இப்படியும் RAM-ஐ அதிகரித்துக்கொள்ளலாம் என்பதை உங்களுக்கு
தெரியப்படுத்துவதற்காகவே ஆகும். இதை உங்களது சொந்த முயற்சியில் செய்து
பாருங்கள்.
செயல்முறைகளின் போது உங்களது ஸ்மார்ட் போனிற்கோ அல்லது SD Card- ற்கோ ஏதாவது பாதிப்பு வந்தால் இந்த பதிவு பொறுப்பாகாது.
இந்த பதிவு முழுக்க முழுக்க Android சார்ந்த கல்வி அறிவிற்காகவே எழுதப்பட்டுள்ளது.