மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து இன்றைய பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
மாடு வளர்ப்போர் இன்று, மாடுகள் அணிந்திருக்கும் கயிறுகளை மாற்றி,
கழுத்து மற்றும் கொம்புகளில் சலங்கை அணிவித்து கோவில்களுக்கு அழைத்துச்
சென்று வழிபடுவர்.
மேலும், மாட்டு வண்டிகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் வருவதும் சில
இடங்களில் நடைபெறும். தமிழரின் தனிச் சிறப்பு வாய்ந்த வீரவிளையாட்டான
ஜல்லிக்கட்டு பெரும்பாலான இடங்களில் இன்று நடைபெறும்.
கால்நடைகள் வளர்போர் வீடுகள் இன்று விழாக்கொலாம் பூண்டிருக்கும்.
மனிதனின் வாழ்வில், உழைப்புக்கு உறுதுனையாய் இருப்பதுடன் உணவளித்து வாழ
வழிசெய்யும் கால்நடைகளை சிறப்பிக்கும் நாள் இன்று.நன்றி தமிழ் உலகம்