சாரைப் பார்
ஆதார் அட்டையா
ஆசிரியர் அங்கே!
வாக்காளர் சேர்ப்பா
வாத்தியார் உள்ளார்!
இலவசப் பொருள்கள்
இறக்கவும் ஏற்றவும்
இருப்பவர் யார்
அவரே ஆசான்!
கண்பரிசோதனையை
கச்சிதமாய் செய்வார்!கட்டிடம் கட்ட
கொத்தனாராவார்!
கக்கூஸ் கழுவும்
ஸ்வீப்பருமாவார்!
கைகழுவும்
சோப்புநீர் தயாரிப்பார்!
ஒரேநேரத்தில்
தமிழும் பேசுவார்
ஆங்கிலமும் பேசுவார்!
பேசாதவர்களையும்
பேசவும் வைப்பார்!
அடேங்கப்பா
இவரோ நவீன
மேஜர்சுந்தரராஜன்!
சதுரங்கம்
சொல்லித்தருவார்!
சுற்றுச்சூழல் மன்றம்
சூப்பராய் வைப்பார்!
பல் மருத்துவராவார்!
கண்மருத்துவராவார்!
சுகாதாரம் கற்பிப்பார்!
மண்புழு உரம்
தயாரிப்பார்!
கணிப்பொறி
கற்ப்பிப்பார்!
பொம்மைகள்
செய்வார்!
பொம்மலாட்ட
பொம்மைகூட
இவர்போல ஆட முடியாது!
எடய்யா ஏபிஎல் என்றால்
உடனே எடுப்பார்!
வேண்டாம் வேண்டாம், வேண்டாம்,
புத்தகம்
என்றால்
சரியே என்று
புத்தகம் திறப்பார்!
எஸ்ஏபிஎல்
என்றால்
சலிக்காமல் சரி என்பார்!
ஏ எல் எம்மையும்
எளிதாய்ப் படைப்பார்!
எஸ் எஸ் ஏ படிவம்
ஏஇஓ ஆபீஸ் படிவம்
பஞ்சாயத்து ஆபீஸ்
முதல்,
பல்கலைக்கழகப் படிவம் வரையில்
யார் எது கேட்டாலும்
உடனே கொடுப்பார்!
நாடகம் நடிப்பார்!
பாட்டும் எடுப்பார்!
இன்று காலை ஒன்பது மணிக்கு
சென்னையில் பயிற்சியென
எட்டு மணிக்கு
எஸ் எம் எஸ் வந்தாலும்
எடுப்பார் ஓட்டம்
உணவுகூட இல்லாமல்!
சிறப்பாய்ப் பயிற்சியில்
முத்திரை பதித்து
மாவட்டத்திற்கே
பெருமை சேர்ப்பார்!
இதற்கெல்லாம்
கின்னஸ் விருதே தரலாம்!
......
ஆனால் கிடைப்பது
என்ன.....
விளக்கம்...
17அ......
17ஆ.....
காரணம் கேட்டால்
அடைவுத்திறன் குறைவு......
........
ஆசிரியர்களுக்கு
இத்தனையெல்லாம்
தருவதற்கு பதில்
ஆல் பாஸ் என்ற
ஒன்றை மட்டும்
எடுத்துவிட்டால்
போதும்.......
இது யாருக்கெல்லாம்
தெரியாதோ....
அவர்களெல்லாம்
அதிகாரியாவதற்கு
தகுதியானவர்கள்!








