'பாடப்
புத்தகங்களில், சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர்
பற்றிய பாடங்களை குறைத்தது ஏன்' என, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
கவுன்சிலான, என்.சி.இ.ஆர்.டி.,யிடம், மத்திய தகவல் கமிஷன் கேட்டுள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, சூர்ய பிரதாப் சிங் ரஜாவட் என்பவர், மத்திய தகவல் கமிஷனில், ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:சுதந்திர போராட்ட வீரர்கள்தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் தான், பள்ளி பாடப் புத்தங்களை தயாரித்து வருகிறது. 2007க்கு முன், பாடப் புத்தகங்களில் தேசிய தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய பாடங்கள் தான் அதிகம் இருக்கும்.








