ஒரு விதமான பயமும், பதட்டமும் காணப்படும்.
அது ஏன்?
1. நம்ம எழுதப் போற examகு லட்சக் கணக்கான பேர் apply பண்ணி இருக்காங்களே....? நாம select ஆவோமா என்ற பயம்......
2. வருடக்கணக்கில் படிக்கிறோம், இன்னும் வேலை கிடைக்கவில்லையே....?? என்ற விரக்தி.......
3. நாம நல்லாத்தான் படிச்சி இருக்கோம், but mindல எதுவுமே இல்லாத மாதிரி இருக்கே.....(இது நிறைய பேர் சொல்றது)
4. இன்னும் சில பேருக்கு அவுங்க மேலயே பயம், நாம நல்லா exam எழுதிடுவோமா???? அப்டின்னு நம்பிக்கை இல்லாமல் இருப்பது.
5. EXAM பத்தின மன அழுத்தம், exam கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்குனு தூங்காமல் கொள்ளாமல் படிப்பது.......???
சில டிப்ஸ் :
எத்தனப் பேர் வேண்டுமானாலும் examகு apply பண்ணட்டும், ஒரு நியூஸ் ல TNPSC பத்தி பேச நான் கேட்டிருக்கேன், இப்ப exam கு கிட்டத்தட்ட எட்டு லட்சம் பேர் apply பண்ணி இருக்காங்க, but அவுங்க எல்லாருமே படிச்சிட்டு வந்து exam எழுத மாட்டாங்க, நன்றாக படித்து தேர்வு எழுதுவோர் மிக மிக குறைவு, so இந்த எண்ணிக்கையைப் பார்த்துப் பயப்பட வேண்டாம் friends. உங்க மேல நம்பிக்கை வையுங்கள்.
எவ்ளோ தேர்வு எழுதியும் வேலை கிடைக்கல அப்டின்னு வெறுத்துப்போகாதீங்க. மின்சார விளக்கை கண்டுபிடிப்பதற்கு முன்பதாக தாமஸ் ஆல்வா எடிசன் 1௦,௦௦௦ தோல்விகளை சந்தித்தார். Disney World உருவாக்கிய வால்ட் டிஸ்னி தனது திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக முயற்சி எடுத்து 302 தடவை தோல்வி அடைந்தார். 302 படிக்கட்டில் தோல்வியடைந்த வால்ட் டிஸ்னி 303 வது தடவை வெற்றிப் பெறுகிறார்.
அவர்களிடம் விரைவாக வெற்றிப் பெறுவது எப்படி என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்கும் போது கூறிய பதில். “ நீங்கள் வேகமாக வெற்றிப் பெற விரும்பினால் உங்களது தோல்விகளின் அளவை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும், ஏனென்றால் வெற்றி தோல்வியின் மறுப்பக்கத்தில் தான் உள்ளது என்றார்.
இவர்களை விடவா நீங்கள் தோல்வி அடைந்து விடப்போகிறீர்கள்????? விரக்தியாக முயற்சி செய்யாமல் வெற்றி பெரும் வரை ஓய மாட்டேன் என உறுதி கொள்ளுங்கள்.
"படித்தது எதுவுமே நினைவில் இல்லை" அப்படி நீங்கள் நினைப்பதே தவறு. எங்கே எல்லாம் மறந்துவிடுமோ என்ற பயமே உங்களை அப்படி நினைக்கச் செய்கிறது. இப்ப என்ன? Exam வரப் போகுது, படிச்சத எழுதப் போறோம்னு coola think பண்ணுங்க friends. பயம்லாம் காணாமல் போய்டும்.
மத்தவங்கள நினைச்சி நீங்கப் படிக்காதீர்கள். உங்க எதிர்காலம், அத மட்டும் நினைங்க. கண்டிப்பா அரசு வேலைக்குப் போவேன் என்ற நம்பிக்கையை அதிகமா வளர்த்துக்கோங்க......
யார் சொல்லியும் ஏதும் மாறப்போவதில்லை. உன்னை குற்றம் சொல்லும் உலகுக்கு உன் திறமையை,🌺 "வெற்றியின் மூலம் நிருபித்துக் காட்டு".🌺
தன்னம்பிக்கையால் எதையும் சாதிக்கலாம் friends🌺.
எதிர்மறையான எண்னங்களை தவிருங்கள்.
முடிந்தவரை படித்தவற்றை திருப்புதல் பண்ணி விடுங்கள்.
தூங்காமல் படித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். so friends health ரொம்ப முக்கியம்.
கண்டிப்பாக என்னால் முடியும் என உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். (முடியும்)
ALL THE BEST TO ALL FRIENDS.








