இதனால், பொதுத்தேர்வில் தமிழுக்கு பதில் தெலுங்கு மொழியை முதல் பாடமாக கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும்‘ என்று கூறியிருந்தனர்.ஆனால், இவர்களது கோரிக்கையை பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர்ஏற்கவில்லை. மனுக்கள் அனைத்தையும் நிராகரித்து உத்தரவிட்டார். இந்த நிலையில், பல மாணவர்கள் தங்களது பெற்றோர் மூலம் ஐகோர்ட்டில்வழக்கு தொடர்ந்துள்ளனர்.தெலுங்குஅந்த வழக்கு மனுவில், ‘எங்கள் பள்ளியில் எங்களுக்கு தமிழை கற்பிக்கவில்லை. தமிழ் ஆசிரியரையும் நியமிக்கவில்லை. எனவே, பொதுத்தேர்வில் முதல் பாடமாக தமிழை எழுதுவதற்கு பதில், தெலுங்கு மொழி பாடத்தை எழுத அனுமதிக்க அரசுக்கு உத்தரவிடவேண்டும். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்றுகூறியுள்ளனர்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு வருகிற 19–ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.