61வது தேசிய விளையாட்டு போட்டி | தமிழ்நாடு | விழுப்புரம் மாவட்டம் | அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,கள்ளக்குறிச்சி.
National Volley Ball Championship 2015-2016 Winner Tamilnadu.
Closing Ceremony
வெற்றி பெற்ற தமிழக அணிக்கு மாண்புமிகு ஊரக தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள் தங்க கோப்பையும்,இரண்டாவது இடத்தை பெற்ற ஹரியானா அணிக்கு வெள்ளி கோப்பையும்,மூன்றாவது இடத்தை பெற்ற கேரளா அணிக்கு வெண்கல கோப்பையும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.தமிழக மண்ணில் முதன்முறையாக விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நான்கு நாட்களாக நடைபெற்ற இப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக இரவு பகல் பாராமல் அயராது உழைத்து வெற்றியடைய செய்த பெருமை அனைத்தும் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்களையே சாரும்..அனைத்து மாநிலத்தை சார்ந்த போட்டியாளர்களும் பத்திரமாக தங்களுடைய மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இறுதி நிகழ்வாக பாரத நாட்டியம்,தார தப்பட்டையுடன் இந்த நான்கு நாள் போட்டி இனிதே நிறைவடைந்தது.வாழ்த்துக்களுடன் கல்விக்குரல்.
தங்க கோப்பையை வென்றது தமிழ்நாடு.
அரை இறுதியில் இமாச்சலப்பிரதேசம் அணியை வென்ற தமிகம் இறுதி சுற்றில் ஹரியானாவை வீழ்த்தி தமிழக மண்ணில் தங்க கோப்பையை வென்றது தமிழகம்
இன்று (10.01.2016)
நாளை 10.01.2016 அரை இறுதி போட்டி- தமிழகம் இறுதி சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லுமா?அரை இறுதியுடன் மோதும் அணிகள் தமிழ்நாடு,கேரளா,ஹரியானா,இமாச்சலப்பிரதேசம்.மோதும் அணிகள்-தமிழ்நாடு-இமாச்சலபிரதேசம்,கேரளா-ஹரியான.இதுவரை தேசிய கையுந்து போட்டியில் மூன்று முறை தமிழகம் இரண்டாம் நிலையான வெள்ளி பதக்கத்தை பெற்றுள்ளது.இந்த ஆண்டு தமிழகம் வெற்றி கோப்பையை வெல்லுமா காத்திருப்போம்.
மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பள்ளிக் கல்வித்துறையில் தேசிய அளவில் விளையாட்டு போட்டி நடைபெறும் விதமாக-இந்தியாவில் இருந்து 27 மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் 19 வயதிற்கு உட்பட்ட 61வது தேசிய மாணவிகள் பங்குபெறும் கையுந்து போட்டியின் (Volley Ball) துவக்க விழா இன்று (07.01.2016)விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாலை 04:30 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.இவ்விழாவில் ஊரக தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திருமதி M. லட்சுமி அவர்கள்,தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் முனைவர் திரு.சா.கண்ணப்பன் அவர்கள்,விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.சா.மார்ஸ் அவர்கள்,கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.கோ.தனமணி அவர்கள்,கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அழகுவேல்பாபு அவர்கள்,கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.என்.இராசமாணிக்கம் அவர்கள் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த கல்வி அலுவலர்கள்,தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,எண்ணற்ற பார்வையாளர்களை கொண்ட சிறப்பான விழா நடைபெற்றது.
விழாவின் முதல் நிகழ்வாக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் முனைவர் திரு.சா.கண்ணப்பன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.பின்னர் மாவட்ட ஆட்சியர் திருமதி M.லட்சுமி அவர்கள் தேசிய விளையாட்டு போட்டி பற்றி உரை நிகழ்த்தினார்.பின்னர் விழா சிறப்புரையாக ஊரக தொழில் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.ப.மோகன் அவர்கள் விளையாட்டுத்துறை பற்றியும், பள்ளிக் கல்வித்துறைக்கு அரசு செய்த சாதனைகள் பற்றியும் விளக்கினார்.விழாவின் இறுதி நிகழ்வாக வெண்புறாக்கள் பறக்கவிடப்பட்டு விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தனர்.
வருகை புரிந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.விழாவின் அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமயில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.தினம் தோறும் பகல் இரவு போட்டியாக நடைபெறும் இந்த தேசிய கையுந்து விளையாட்டு போட்டி வரும் 10.01.2016 அன்று நிறைவடைகிறது.இது போன்ற நிகழ்வின் வாயிலாக கண்டிப்பாக இந்திய மாணவர்கள் உலக அளவில் விளையாட்டில் சாதிப்பார்கள் என்பதில் ஐயம் இல்லை..என்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நலனில் கல்விக்குரல்.