பள்ளிக்கல்வி அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ஆல் 15000க்கும்
மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறி???
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் ஆணையிடப்பட்டு நூறாண்டுபேசும் ஓராண்டு சாதனைகளில் ஒன்றான 16549 பகுதிநேர ஆசிரியர்களைபள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க அரசாணை 177ன்படி ஆறு முதல்எட்டுவரையிலான வகுப்புகளில் நூறுக்குமேல் மாணவர்கள் உள்ளஅரசுப்பள்ளிகளுக்கு வாரம் 3 அரைநாட்கள் என்று மாதத்தில் 12 அரைநாட்கள்பணிபுரிய ஓவியம், உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களான கணினி, இசை,தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் பாடங்களை நடத்திட2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.5000 தொகுப்பூதியத்தில் நியமித்தது.
தொடர் கோரிக்கைகளை தொடர்ந்து ஊதியம் மற்றும் பணி நிமித்தம் சார்பாக
அவ்வப்போது அறிவுரைகளை, செயல்முறை ஆணைகளை வழங்கியும் மேலும் புதிய அரசாணை
186 மூலம் தொகுப்பூதியமும் ரூ.2000 உயர்த்தப்பட்டு ஏப்ரல் 2014 முதல்
ரூ.7000ஆக வழங்கப்படுகிறது. அரசாணைப்படி ஒரு ஆசிரியர் ஒன்றிற்கு மேற்பட்ட
பள்ளிகளில் பணியாற்றும் வாய்ப்பு, மாதத்தின் முதல் தேதியில் ECS முறையில்
ஊதியம் போன்றவைகளையே இதுவரை கேட்டும் தீர்வு கிடைக்காததால் – அரசின்
திட்டத்தின் அடிப்படையிலான வேலையில் தொடரும் எங்களின்
வாழ்வாதாராம்-எதிர்காலம் எல்லாமே அரசின் கைகளிலே!!!!!. எங்களின்
எதிர்காலம் அரசு புதிய அரசாணை வெளியிட்டால் மட்டுமே சிறக்கும்!!!!!
15000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின்
தொடர் கோரிக்கைகள்
1) நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்துவரும் 15000க்கும் மேற்பட்ட
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2) பணியில் இருக்கும்போது மரணமடைந்த பகுதிநேர ஆசிரியர்களின்
குடும்பங்களை அரசு தத்து எடுக்க வேண்டும்.
3) பணிநிரவலில் இப்போதும் 100க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள
பள்ளிகளுக்கும் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணிநிரவலால்
தொலைதூரம் சென்று பணி செய்பவர்களுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் வாய்ப்புகள்
வழங்க வேண்டும்.
வேலை வாய்ப்பு திண்டாத்தில் நாடு தத்தளிப்பதால் கிடைத்த வேலையை உறுதி
செய்து கொள்ள மன்றாடும் எங்களுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும், அனைத்து
நாளேடுகளும், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்புகளும், அனைத்து கல்வி
இணையதளங்களும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களிடம் வேண்டுகோள்
வைக்கவும் வேண்டுகிறேன். அனைவருக்காகவும் கடலூர் செந்தில் (எ)
சி.செந்தில்குமார், (9487257203), கலியமலை ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப்பள்ளி, கடலூர் மாவட்டம்.








