இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடக்கும் உலக மொபைல் மாநாட்டில், இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2014ல், புதிய சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தோம். அதன்படி, ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இரண்டு மணிநேரம் பேச முடியும்.
தற்போது அது மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஐந்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 10 மணிநேரம் பேச முடியும். 15 நிமிடங்களில், பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யலாம்.
இதற்காக பிரத்யேகமான தொழில்நுட்பத்துடன் கூடிய, புதிய பேட்டரிகள், சார்ஜர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய தொழில்நுட்பத்தில், சார்ஜ் செய்யும்போது, பேட்டரி சூடாகாது; மின்சார பயன்பாடும் குறைவாகவே இருக்கும். இந்த சார்ஜர் மிகவும் பாதுகாப்பானது. சார்ஜ் செய்யும்போதே, மொபைல் போனை பயன்படுத்தலாம்.








