பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 2 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தை
செவ்வாய்க்கிழமை தொடங்குவதால், பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை
ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகள்:
வட்டாட்சியர்களுக்கு ரூ.15,600-ம், உதவியாளர்களுக்கு ரூ. 9,300 -ம் ஊதிய விகிதமாக அறிவிக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்களுக்கு ரூ. 400 தனி ஊதியம் வழங்க வேண்டும்.
பட்டதாரி, இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை மீண்டும் வழங்க வேண்டும்.
வருவாய்துறையில் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரத்துக்கும் மேல்பட்ட காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். வட்டாட்சியர்களுக்கு ரூ.15,600-ம், உதவியாளர்களுக்கு ரூ. 9,300 -ம் ஊதிய விகிதமாக அறிவிக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர்களுக்கு ரூ. 400 தனி ஊதியம் வழங்க வேண்டும்.
பட்டதாரி, இளநிலை உதவியாளர் தட்டச்சர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகளை மீண்டும் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும் தோட்டக்காரர் (மசால்ஜி) பணியிடத்தை உருவாக்க வேண்டும்.
கடந்த 2011 - தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிப்பட்டி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தைத் தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாவட்டம் முழுதும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எஸ். நாகராஜன் கூறியது:
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாகும். இத்திட்டத்தில் ஊழியர்கள் ஊதியத்தில் 10 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது, இதே விகிதத்தை அரசும் செலுத்த வேண்டும். ஆனால், இதில் சுமார் ரூ. 7 ஆயிரம் கோடியை அரசு செலுத்தாததால் இதுவரை ஓய்வு பெற்ற சுமார் 5,600 ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பலன் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆந்திர மாநிலத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை அந்த அரசு ரத்து செய்துள்ளது. அதைப் போல தமிழக அரசும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பிப்.2, 3 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 12 ஆயிரம் ஊழியர்களும் கலந்து கொள்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 520 ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் முழு அளவில் பங்கேற்றவுள்ளனர் என்றார்.








