இந்தப் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி பிப். 15-இல் தொடங்கியது. திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. இந்தப் பணி நிறைவடைந்தவுடன், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, நீக்கப்பட்டவர்களின் பெயர்களுக்கு ஒப்புதல் பெறப்படுகிறது.
பெயர் நீக்க படிவம் 7-ஐ அதிகளவு இருந்தால், எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.
தேர்தல் அறிவிப்பு எப்போது?: சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு, மார்ச் முதல் வாரத்தில், அதாவது 3 அல்லது 4 ஆகிய தேதிகளில் அறிவிக்கப்படலாம் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கேற்ற வகையில் அரசுத் துறைகளின் அனைத்துப் பணிகளையும் மார்ச் 1-ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.








