முதன்மை நிறுனமாக கருதப்படும் ஐஐடி.,க்களில் சர்வதேச மாணவர்களும் சேர்ககை பெரும் வகையில் நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது.
ஐஐடி.,க்களில் சேர JEE Advanced என்ற நுழைவுத்தேர்வு
நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வு முறை வெளிநாட்டு மாணவர்களை வெகுவாக
கவர்ந்து வருகின்றது.
அந்த வகையில், 2017-ம் ஆண்டு முதல் சார்க் நாடுகளான
(ஆப்கானிஸ்தான், நேபால், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான்), சிங்கப்பூர்,
எதோபியா மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளிலும் JEE Advanced நுழைவுத்தேர்வு நடத்த
ஐஐடி,க்கள் திட்டமிட்டுள்ளன.
சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகள்
மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு
மாணவர்களுக்கும் JEE Advanced-2017 தேர்வு நடத்தப்படும் என்ற இறுதி முடிவை
எடுத்துள்ளனர்.
இந்தியாவில் மட்டும் நடத்தப்படும் இந்த நுழைவுத்தேர்வு
2017-ம் ஆண்டு முதல் வெளிநாட்டிலும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய
மனிதவள மேம்பாட்டுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்
அடுத்த ஆண்டு முதல் 18 ஐஐடி.,க்களில் உள்ள சேர்க்கைக்கான இடங்களும்
அதிகரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.








