புதிய பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்குதல், ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகளுக்கு அனுமதி நீட்டிப்பு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை ஏஐசிடிஇ மேற்கொண்டு வருகிறது.
புதிய சலுகைகள்: இம்முறை பல்வேறு புதிய சலுகைகளையும் ஏஐசிடிஇ அறிவித்திருக்கிறது.
அதன்படி, தன்னாட்சி பொறியியல் கல்லூரிகள், 50 சதவீத படிப்புகளுக்கு தேசிய அங்கீகார வாரியத்தின் (என்.பி.ஏ.) அங்கீகாரம் பெற்றிருக்கும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்குவது, பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீதம் முழு நேரப் பேராசிரியர்கள் இருந்தால் போதுமானது, புதிய கல்லூரி தொடங்க கிராமங்களில் 7.5 ஏக்கர் நிலமும், நகர்ப்புறங்களில் இரண்டு இடங்களில் 2.5 ஏக்கர் நிலமும், மெகா மெட்ரோ நகரமான சென்னையில் 1.5 ஏக்கர் நிலமும் போதுமானது என்பன உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








