கட்டண வசூல்
‘இணையதள சேவைகளுக்கு வெவ்வேறுவகையான கட்டணங்களுக்கு தடை விதித்தல்’ தொடர்பான புதிய உத்தரவு ஒன்றை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையம் (டிராய்) நேற்று பிறப்பித்தது. அதில், இணைய சமநிலைக்கு ஆதரவான நிலையை எடுத்துள்ளது. அதில், கூறப்பட்டு இருப்பதாவது:-
எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனமும் இணையதளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் தன்னிச்சையாக வெவ்வேறு வகையான கட்டணங்களை வசூலிக்கக்கூடாது. சலுகைகளையும் அறிவிக்கக்கூடாது. இந்த உத்தரவில் குறிப்பிட்டதற்கு எதிராக எந்தவகையான ஒப்பந்தத்தையும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தனியாரிடமோ, மற்ற நிறுவனங்களிடமோ மேற்கொள்ளக்கூடாது.
ரூ.50 ஆயிரம் அபராதம்
நெருக்கடியான சமயங்களில் அவசர சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கட்டண குறைப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நெறிமுறைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீறும் பட்சத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த உத்தரவை ‘டிராய்’ நிறுவனம் மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.








