குடும்பமும் சமுதாயமும்
1 யார் அனைவரும் தங்கள் தங்கள் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்தே இருக்கிறார்கள்? மனிதர்கள்
2 பல சமூகங்கள் ஒன்றோடு ஒன்று சார்ந்தும் சேர்ந்தும் வாழ்வது ……………. எனப்படும். சமுதாயம்
3 நம்முடைய தெரு வார்டு ஊர் வட்டம் மாவட்டம் மாநிலம் நாடு என ……….. விரிவடைகிறது. சமுதாயம்
4 நாடெங்கும் உள்ள தொழிலாளர்கள் உற்பத்தியாளர்கள் பணியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அமைப்பும் …………… எனப்படும்.
சமுதாயம்
5 நமது வீட்டில் பெரும்பாலும் உணவு தயாரிப்பவர்கள் யார்? பெற்றோர்கள்
6 ஒருவருக்கொருவர் உதவி செய்வதாலும் உதவுவதாலும் நமக்கும் எதிர்வீட்டில் இருப்பவர்களுக்குமிடையில் ………….. ஏற்படுகின்றன. நட்பும் அன்பும்
7 இன்பம் துன்பம் ஆகிய உணர்வுகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு சேர்ந்து வாழும் மக்கள் குழு ……….. எனப்படும். சமூகம்
8 ஒரே சமுதாயத்தில் பல …………. இருப்பதும் உண்டு. சமூகங்கள்
9 இன்பம் துன்பம் கௌரவம் ஆகிய உணர்வுகள் சமூகத்தின் ………….. ஆகும். நாடித்துடிப்புகள்
10 ஒற்றுமை கடமை உரிமை பங்கேற்பு பாதுகாப்பு வளர்ச்சி ஆகியவை சமுதாயத்தின் ………. ஆகும். உயிர்மூச்சி
11 சமுதாயம் சமூகம் இவை இரண்டுமே ஒன்றோடு ஒன்று இணைந்த ….. அமைப்புகளாகும். கூட்டுவாழ்க்கை
12 ஒவ்வொருவரின் உரிமைக்காகவும் எல்லோரும் ….. கொடுக்க வேண்டும். குரல்
13 தங்கள் தேவைகளை ஒர் மனிதன் நிறைவேற்றிக் கொள்வதைப் போலவே ………… களையும் நிறை வேற்றுவதில் பங்கேற்க வேண்டும். பொதுத்தேவை
14 …………… என்பது நல்வாழ்வின் ஆதாரமாகும். குடும்பம்
15 நிம்மதியான வாழ்வுக்கு வகை செய்வது எது? சமூகம்
16 கடமை உரிமை உடைமை பாதுகாப்பு முன்னேற்றம் ஆகியவற்றை எல்லோருக்கும் வழங்க முற்படுவது எது? சமுதாயம்
17 “எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள்” என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்? மகாகவி பாரதியார்
18 ஒரே வீட்டில் வசித்து ஒரே அடுப்பில் சமைத்துப் பகிர்ந்துண்டு வாழ்கிற உறவினர் குழுவிற்குக் ………………. என்று பெயர். குடும்பம்
பாடம் - 2
சமுதாயமும் பள்ளியும்
19 ………… தன் நோக்கங்களை அடைய ஒவ்வொரு நாளும் முயல்கிறது. சமுதாயம்
20 சமுதாயத்தின் அனைத்து முன்னேற்றங்களுக்கும் அடிப்படை முதலீடு எது? கல்வி
21 தன்னிடமுள்ள அனைத்து குழந்தைகளையும் …… கற்கச் செய்வதன் மூலம் தனது இலட்சியத்தை அடைய சமுதாயம் முனைந்து செயல்படுகிறது. அடிப்படை கல்வி
22 அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கற்கச் செய்வதற்காக அரசாங்கம் செயல்படுத்தி வரும் திட்டம் எது? அனைவருக்கும் கட்டாய இலவச கல்வித் திட்டம்
23 ஒரு சமுதாயத்தின் முன்னேற்றமும் அதன் ஒளிமயமான எதிர்காலமும் அச்சமுதாயத்தின் தளிர் பருவத்தினரின் …….. சார்ந்து நிற்கிறது. தொடக்கக்கல்வியை
24 சமுதாய நிறுவனங்களுள் ஒன்றாக கருதப்படுவது எது? பள்ளி
25 சமுதாயத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு வழிவகுப்பது எது? பள்ளி
26 வருங்கால சமுதாயத்தின் குடிமக்கள் யார்? குழந்தைகள்
27 பொறுப்பும் ஓழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இளைஞர்களை உருவாக்கவே செயல்பட்டு வருவது எது? பள்ளிகள்
28 பள்ளியின் ஒவ்வொரு செயலும் எதனுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தருவதாய் அமைய வேண்டும்? சமுதாயம்
29 பள்ளியே சமுதாய முன்னேற்றத்தின் ……………….. ஆகும். விளை நிலம்
30 பள்ளி சேவையின் முதன்மைப் பயனாளர்கள் யார்? சமுதாயத்தினர்
31 தெய்வத்திற்கு நிகரான உயர் தகுதியை யாருக்கு சமுதாயம் வழங்கி மகிழ்கிறது? ஆசிரியர்கள்
32 யாருடைய இயல்புகளுக்கு மாறுபடாத வகையில் ஆசியர்களுகம் பெற்றோர்களும் பள்ளி வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும்? குழந்தைகள்
33 ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூடிச் செய்யும் கூட்டு முயற்சியாகவே….. விளங்குகிறது. தொடக்கக்கல்வி
34 “வெள்ளை நிறத்தெரு பூனை ………. எங்கள் வீட்டில் வளரும் கண்டீர்” என்று தொடங்கும் பாடலை இயற்றியவர் யார்? மகாகவி பாரதியார்
35 பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமுதாயத்தோடு இணைந்து செயல்படும்போது அவர்களே மாணவர் சமுதாயம் என்றும் வளரிளம் பருவத்தினர் என்றும் ….. என்றும் அழைக்கப்படுகின்றனர். இளைஞர் சமுதாயம்
36 இனம் மொழி நிறம் மதம் என்று வேறுபாடுகள் இருப்பினும் நாம் அனைவரும் ….. ஆவர். இந்தியர்
37 வேற்றுமைதான் உலகின் நியதி அவற்றுள் ……….. யைக் காண்பதே மனித மாண்பு ஆகும். ஒற்றுமை
38 வளைவும் வடிவ வேறுபாடுகளுமே எதை உருவாக்குகின்றன? ஓவியம்
39 குடும்ப வாழ்வின் தொடர்ச்சியாகவே ……………….. அமைகிறது. பள்ளி வாழ்க்கை
40 மாணவர்கள் சமுதாய வாழ்வில் வெற்றிபெற ஒவ்வொரு நாளும் தங்களைப் …… கொள்ள வேண்டும். பக்குவபடுத்திக்
41 பள்ளியோடு சமுதாயத்தை இணைக்கும் பொறுப்பாளர் யார்? ஆசிரியர்
42 பள்ளி ….. நிறுவனம் ஆகும். சமுதாயம்
பாடம் - 3
ஊரகமும் நகர்ப்பகுதிகளும்
43 நகரம் மாநகரம் என்பவை அதிக ……….. கொண்டவை. மக்கள் தொகை
44 சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் நெல்லை என …….. இன் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கின்றன. மாநகரங்கள்
45 மாநகரங்களில் மக்கள் தொiயின் ……………… அதிகம் உள்ளது. அடர்த்தி
46 மாநகரங்கில் அகன்ற ……….. உள்ளன. நான்கு வழிச்சாலைகள்
47 மாநகரங்களைச் சுற்றிலும் சுமார் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் ……. தொடங்குகின்றன? கிராமப்பகுதிகள்
48 கிராமப் பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன? ஊரகப்பகுதிகள்
49 இன்றைய சுழலில் ஊரகப்பகுதிகளுக்கும் நகரப்பகுதிகளுக்கும் இடையே பெரும் …….. அதிகரித்து வருகின்றன. இடைவெளி
50 அரசு அலுவலகங்களிலும் தொழில் நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றுகிறவர்களுக்கு ……….. கிடைக்கின்றது. மாதஊதியம்
51 நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் திரைப்படம் தொலைக்காட்சி பத்திரிகைகளில் பணி செய்வோருக்கும் ஒரளவு ………. வருகிறது. நிரந்தர வருமானம்
52 கிராமத்தவர் பெரும்பாலோர் விவசாயத் தொழிலாளர்களாகவோ மிகச் சிறிய ……. களாகவோ இருக்கின்றனர். விவசாயி
53 விவசாயம் சீராகவும் விரிவாகவும் நடைபெறும் ….. வரையில் விவசாயத் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலைகள் கிடைத்தன. விளைச்சல் காலம்
54 அண்மைக்காலமாக மேய்ச்சல் நிலங்கள் குறைந்து கொண்டே வருவதால் ……. குறைந்து வருகின்றது. கால்நடைவளர்ப்பு
55 பெரும்பாலான விளைநிலங்கள் …….. களாகி வருகின்றது. வீட்டு மனை
56 தொடக்க ….. நடுநிலை ….. உயர்நிலைக் கல்வி வரை மட்டுமே எங்கு கல்வி பெற முடிகிறது? ஊரகவாழ்ககை
57 அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வி வழங்கும் கல்வி நிலையங்களில் சேரும் வாய்ப்புகள் எங்கு உண்டு? நகர வாழ்க்கை
58 பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் தொடக்க கல்வியை உறுதிசெய்வதற்கு ………. திட்டமும் தமிழகத்தில் செயல்படுகிறது. அனைவருக்கும் கல்வி
M. R. College Ariyalur
59 இடைநிலைக் கல்வியைத் தொடர …….. திட்டமும் தமிழகத்தில் செயல்படுகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம்
60 போக்குவரத்து வசதிகள் அதிகமாக உள்ள பகுதிகள் யாவை? நகர்புற பகுதிகள்
4. குடியரசு
61 முந்தைய காலத்தில் தமிழ்நாட்டடை ஆண்ட மூவேந்தர்கள் யார்? சேர சோழ பாண்டியர்கள்
62 ஆங்கிலேயர்கள் போர்ச்சுக்கீசியர்கள் டச்சுக்காரர்கள் பிரெஞ்சுக்காரர்கள் போன்றோர்…….. செய்வதற்காக இந்தியாவிற்கு வந்தனர். வியாபாரம்
63 ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி சுமார் எத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்தனர்? முந்நூறு ஆண்டுகாலம்
64 யாருடைய காலத்தில் ஜமீன்தார்கள் உருவானார்கள்? ஆங்கிலேயர்கள்
65 இந்தியா எப்போது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்றது? 15 ஆகஸ்ட் 1947 – ஆம் ஆண்டு
66 விடுதலை பெற்ற இந்தியாவில் எத்தகைய அரசு அமைய வேண்டும் என்ற விவாதம் எழுந்த போது நமது நாடு …….. அரசாக அமைய வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. மக்களாட்சி
67 மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் அரசு ……… எனப்படும். மக்களாட்சி அரசு
68 வாக்களிக்கும் வயதை அடைந்த அனைவரும் வாக்களித்து அதன்படி தேர்ந்தெடுக்கப்படும் ………..களால் ஆளப்படுவது மக்களாட்சி ஆகும். பிரதிநிதிகள்
69 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும் ஓர் ஆளும் அமைப்பைத்தான் …………. என்கிறோம். குடியரசு
70 மக்களின் பிரதிநிதிகளாகத் தேர்தலில் நாம் தேர்ந்தெடுத்துள்ளவர்கள் அடங்கிய மக்களவை ….. மூலமே நாம் முடிவுகளை எடுக்கிறோம். சட்டமன்றங்கள்
71 நமது பிரதிநிதிகளை நாம் ……………… மூலம் தேர்ந்தெடுக்கிறோம். தேர்தல்
72 நமது ………. ல் அனைவருக்கும் சமமான நீதி சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் அமைப்புச் சட்டம்
73 அரசியல் அமைப்புச்சட்டத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கும் பணி எதனுடையது? நீதிமன்றங்கள்
74 மக்கள் தங்கள் குறைகளை எங்கு முறையிட்டால் அது விசாரணை செய்து சட்டப்படி தீர்ப்பு வழங்குமிடம் எது? நீதிமன்றம்
75 சட்டத்திற்கு முன் அனைவரும் ……….. ஆகும். சமம்
76 மாவட்ட வளர்ச்சிப் பணிகள் திட்டங்கள் முதலியவற்றை நிறைவேற்றுதல் யாருடைய பொறுப்பாகும்? மாவட்ட ஆட்சித்தலைவர்
77 ஆர்வமும் திறமையும் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் …….. பயின்று வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் வரலாம். சட்டம்
78 குடிநீர் மின்சாரம் உணவு வழங்கல் போக்குவரத்து போன்ற மக்களின் அடிப்படையான அன்றாடத் தேவைகளை ……. அலுவலர்கள் நிறைவேற்றுவார்கள். நிர்வாகத்துறை
79 கிராம நிர்வாக அலுவலர் முதல் வருவாய் ஆய்வாளர் வட்ட ஆட்சியர் கோட்ட வருவாய் அலுவலர் மாவட்ட வருவாய் அலுவலர் வரையில் பல்வேறு நிலைகயில் ……….. அலுவலர்கள் உள்ளனர். நிர்வாகத்துறை
80 நிர்வாகத் துறை அலுவலர்கள் அத்தனை பேருக்கும் தலைமை அலுவலராக இருந்து அரசிடமிருந்து வரும் அணைகளை நடைமுறைப்படுத்துபவர் யார்? மாவட்ட ஆட்சியர்
81 ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று……. கடைப்பிடிக்கப்படுகிறது. மக்கள்குறை தீர்க்கும் நாள்
82 மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத ஊரக சுற்றுவட்டார ஏழை மக்கள் மாத்தில் ஒரு நாள் அவ்வூரில் நடத்தப்படும் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் குறைகளை கூறி தீர்வு காண்கிற நாளை …….. என்கிறோம். மக்கள் தொடர்பு திட்ட நாள்
83 நமது அரசாங்க அமைப்பிற்கு விதிகளை அரசியல் சட்டத்தொகுப்பு மூலம் உருவாக்கி வைத்திருப்பதை ……………. என்கிறோம். அரசியலமைப்புச்சட்டம்
84 சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதும் குற்றங்கள் நிகழாமல் தடுப்பதும்…….யின் பொறுப்பாகும். காவல் துறை
85 நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது அந்நியர்களின் படையெடுப்புகளிலிருந்து நாட்டைப்பாதுகாப்பது மிகப் பெரிய இயற்கைப் பேரழிவுகளின் போது உள்நாட்டு நிர்வாகத்திற்கு உதவியாக களமிறங்கி நிவாரணம் தருவது போன்றவை…... கடமையாகும். தேசிய இராணுவம்
86 நமது இந்திய நடுவண் அரசின் அமைச்சரவையில் தலைவர் ………….. எனப்படுகிறார். பிரதமர்
87 மாநிலங்கள் …….. தலைமையில் அமைச்சரவைகளால் ஆளப்படுகின்றது. முதலமைச்சர்கள்
88 மக்களவை ………. மாநிலங்களவை மாநிலச் சட்டமன்றங்கள் ஆகியவை எதன் படி தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மூலம் நாட்டை நிர்வாகம் செய்கின்றன? அரசியலமைப்பு சட்டம்
89 நமது ஆட்சி அமைப்பிற்கு …….. என்று பெயர். மாநகராட்சி
பாடம் - 5
உள்ளாட்சி
90 நாட்டின் தொலைதூரத்திலுள்ள மக்களுக்குச் சேவை செய்வதற்கே …….. நிர்வாக அமைப்புகள் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சி
91 “பண்பொழில்” என்பது என்ன? தமிழ்நாட்டிலுள்ள ஊர்பெயர்
92 ஊராட்சி ஒன்றியம் பேரூராட்சி மாவட்ட ஊராட்சி ஆகிய அமைப்புகள் பிரதிநிதிகளுடன் செயல்படுகின்றன. இந்த அமைப்பிற்கு …….. என்று பெயர். உள்ளாட்சி நிர்வாகம்
93 உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்திய ஆங்கில ஆட்சியாளர் யார்? ரிப்பன் பிரபு
94 நாட்டு விடுதலைக்கு முன்பே ……….. நம்நாட்டில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. உள்ளாட்சி நிர்வாகம்
95 மத்தியமாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் மானியங்களையும் உதவித் தொகைகளையும் முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன? ஊரக வளர்ச்சி முகமை
96 ஒவ்வொரு கிராமத்திலும் எது அமைக்கபட்டுள்ளது? ஊர் மன்றக்கூட்டம் (கிராம சபை)
97 எந்த எல்லைக்குட்பட்ட மக்கள் அனைவரும் கிராமசபை உறுப்பினர்கள் ஆவர்? ஊராட்சி
98 கிராமத்தின் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் ஆண்டு வரவு …… செலவுத் திட்டங்கள் திட்டங்களின் பயனாளிகள் யார் என்பது போன்ற அனைத்தும் எதன் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படும்? ஊர் மன்றக்சுட்டத்தில்
99 பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்படுவது………….. ஆகும். ஊராட்சி ஒன்றியம்
100 தேர்தல் மூலம் எத்தனை மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? ஐந்தாயிரம்
101 ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகின்றன? நான்குமுறை
102 “சனவரி 26” இந்தியாவில் எந்தநாளாக கொண்டாடப்படுகிறது? குடியரசு நாள்
103 மே 1 இந்தியாவில் எந்த நாளாக கொண்டாடப்படுகிறது? தொழிலாளர் நாள்
104 இந்தியாவின் விடுதலை நாளாக எந்த நாள் கொண்டாடப்படுகிறது? ஆகஸ்ட் 15
105 மகாத்மா காந்தி பிறந்த நாள் எது? அக்டோபர் 2
106 ஊராட்சி ஒன்றியத்தின் பணிகளை பேற்பார்வை செய்யவும் கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்………. உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை
107 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு …………….. அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி
108 எத்தனை மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? 50000
109 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு? ஐந்து ஆண்டுகள்








