- தேர்விற்கு முன்பு புதிதாக ஏதும் படிக்க முயற்சிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த பாடங்களை நன்கு நினைவுப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
- அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்களில் அறிவுக்கூர்மை தொடர்பான சூத்திரங்கள் (Formulaes) மற்றும் முறைகளை (Methods) நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும், ஏனனெனில் இத்தேர்வில் அறிவுக்கூர்மை மற்றும் திறனறிதல் தொடர்பாக 25 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
- அரசியல் அறிவியல் பாடத்தினை பொருத்தவரை முக்கியமான சரத்துக்கள், சட்டத்திருத்தங்கள் மற்றும் பகுதிகள் ஆகியவற்றை நினைவுக்கூர்வது அவசியமாகும்.
- வரலாறு பாடப்பிரிவினை பொருத்தவரை முக்கிய நிகழ்வுகளின் நாள் மற்றும் வருடம் ஆகியவற்றை தனியே குறிப்பெடுத்துக் கொண்டு நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
- பொருளாதார பாடப்பிரிவில் திட்ட காலங்கள் மற்றும் அத்திட்டத்திற்கான மையக்கரு, நலத்திட்டங்கள், அவை நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு மற்றும் அத்திட்டங்கள் யாருடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதையும், முக்கிய பொருளாதார கோட்பாடுகளையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
- அறிவியல் பாடப்பிரிவில் முக்கிய கலைச்சொற்கள் மற்றும் கருத்தாக்கம் ஆகியவைகளை மனதிலநன்கு பதிந்து கொள்வது அவசியமாகும்.
- புவியியல் பாடத்தை பொருத்தவரை மலைத்தொடர்கள், ஆறுகள், காலநிலை, உலோகத் தாதுக்கள் கிடைக்கும் இடங்கள், காடுகள், நீர்த்தேக்கங்கள் இவை தொடர்பான குறிப்புகளை படித்துக்கொள்ள வேண்டும்.
- தமிழ்நாடு பற்றிய பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படுகின்றன, உதாரணமாக ஆட்சியாளர்கள், திட்டங்கள் செயல்படுத்திய ஆண்டு, தொழிற்சாலைகள் துவங்கப்பட்ட ஆண்டு, பல்கலைக்கழகம், மாவட்டங்கள் தொடர்பான செய்திகள் ஆகியவற்றை படித்துக்கொள்ள வேண்டும்.
பொதுத் தமிழ்
பொதுத்தமிழ் பாடத்தை பொருத்தவரை தேர்வில் 80 கேள்விகள் கேட்கப்படுவதால் இப்பாடப்பிரிவில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக
பகுதி அ பாடப்பிரிவில் (இலக்கணம்) எதுகை, மோனை, இலக்கண குறிப்பறிதல்இ பிழை திருத்தம், தொடரும் தொடர்பு அறிதல் பெயர்ச்சொல்லின் வகையறிதல் ஆகிய பகுதிகளுக்கான இலக்கண விதிகளை நன்கு நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பகுதி ஆ (தமிழ் இலக்கியம்)பாடப்பிரிவில் திருக்குறள், பதிணென்கீழ்கணக்குநூல்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கிய மேற்கோள்கள், சமய முன்னோடிகள் தொடர்பான பகுதிகளில் நன்கு கவனம் செலுத்த வேண்டும்.
பகுதி இ (தமிழ் அறிஞர்களும்தமிழ்தொண்டும்) பாடப்பிரிவில் தமிழ் அறிஞர்களின் புனைப்பெயர்கள் இயற்றிய நூல்கள் அடைமொழிகள், அறிஞர்கள் தொடர்பான செய்திகள் குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தேர்விற்கு செல்லும் முன்கவனத்தில் கொள்ள வேண்டியவை
- தேர்வு மையத்தினை தேர்வு நாளுக்கு முன்பே சென்று அறிந்து வர வேண்டும். ஏனெனில் தேர்வு நாளன்று தேர்வு மையத்தினை தேடுவதால் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்கலாம்.
- தேர்விற்கு தங்களுக்கு பழக்கப்பட்ட பந்துமுனை (பால் பாயிண்ட்) பேனாக்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும். குறிப்பாக பந்துமுனை போனாவின் முனையானது கூர்மையாக இல்லாமல் தட்டையாக உள்ளவாறு வாங்கிக் கொள்ள வேண்டும. ஏனெனில் கூர்மையான பேனாவினால் விடையினை குறிக்கும் பொழுது விடைத்தாளில் சேதமடைய வாய்ப்புள்ளது.
- தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிற்கும் செய்யும் பொழுது புகைப்படம் இல்லையெனில் தேர்வுக்கு செல்லும் பொழுது நுழைவுச்சீட்டுடன் இரண்டு புகைப்படங்களையும் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும்.
- தேர்வுக்கு முதல் நாள் குறைந்தது 8 மனிநேரம் உறக்கம் அவசியம் என்பதால் இரவு உணவை விரைவாக அருந்திவிட்டு காலம் தாழ்ந்தால் நேரத்துடன் உறங்க செல்ல வேண்டும்.
- தேர்விற்கு தேவையான பேனாக்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை ஞாபகமாக எடுத்து வைத்துககொள்ள வேண்டும்.
தேர்வு நாளன்று
- தேர்வு நாளன்று காலை சிற்றுண்டியை அருந்திவிட்டு செல்வது அவசயமாகும்.
- தேர்வு அறைக்கு செல்லும் பொழுது உடன் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்வது அவசியம்.
- அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு மையத்தில் இருக்க வேண்டும்.
- தேர்வு அறையினுள் அறை மேற்பார்வையாளர் விளைத்தளினை அளித்தவுடன் தங்கள், பெயர், பதிவு எண், தேர்வின் பெயர், கையொப்பம் ஆகிய பகுதிகளை நிதானமாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
v வினாத்தாளினை பெற்றவுடன், வினாத்தாளின் பக்கங்கள் மற்றும் கேள்வி எண்கள் சரியாக உள்ளதா என்பதை சோதித்துக் கொள்ளவும், ஏனெனில் ஏதேனும் குறைபாடு இருப்பின் உடனே அறை மேற்பார்வையாளரிடம் தெரிவித்து வேறு வினாத்தாளினை பெற இயலும், வினாத்தாளில் உள்ள வரிசை எண்ணை விடைத்தாளில் அளிக்கப்பட்டுள்ள தகுந்த இடத்தில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
v விடைத்தாளினை பூர்த்தி செய்தபின், உங்களுக்கு நன்றாக படித்த பாடப்பிரிவுகளில் சிறந்தவராக இருந்தால் பொதுத்தமிழ் கேள்விகளுக்கு முதலில் விளையளிக்க தொடங்கலாம் அல்லது அறிவு கூர்மை மற்றும் திறனறிதலில் சிறப்பானவராக இருந்தால் அந்த வினாக்களில் இருந்து அந்த வினாக்களில் இருந்து பதிலளிக்க தொடங்கலாம்.
v குழப்பமான வினாக்களுக்கு உடனே பதில் அளிக்காமல் அடுத்தவினாவிற்கு பதில் அளிக்க முயற்சி செய்ய வேண்டும், ஏனெனில் முந்தைய குழப்பமான வினாவிற்கான விடை பின்பு வரும் கேள்விகளை படிக்கும் பொழுது உங்கள் நினைவிற்கு வர வாய்ப்புள்ளது.
v வினாவினை படித்து வினாவிற்கான விடையை உடனே விடைத்தாளில் குறித்து விட வேண்டும். கடைசியாக குறிக்கும் பழக்கம் ஆபத்தானது. ஏனெனில் விடைத்தாளில் விடையினை குறிப்பதற்காக போதுமான கால அவகாசம் இறுதியில் இல்லாமல் போய்விடும்.
v கேள்விகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் கேட்கப்படும் தமிழ் வழிக்கேள்வியில் ஏதேனும் சந்தேகமோ அல்லது பிழையாக இருப்பதாக உணர்ந்தால் ஆங்கில வழி கேள்வியினை படித்து பின்பு விளையளிக்க வேண்டும். ஏனெனில் ஆங்கில வழியில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பதிலே இறுதியானது.
v நன்கு பயிற்சிபெற்று தேர்விற்குத் தயாரான நபர்கள் மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றினால் தேர்வில் வெற்றி பெறுவது உறுதி. தேர்வில் வெற்றி பெற்று நேர்மையான அலுவலராக வலம்வர kalvikural teamசார்பாக வாழ்த்துகிறோம்.source maanavan website..