480 கிராமக் கணக்கு எண் 4 எத்தனை பிரிவுகளில் பராமரிக்கப்படுகிறது. இரு பிரிவுகளில்
481 கிராமக் கணக்கு எண் 4-இன் கணக்கில் கலம் …… முதல் கலம் …. வுரை அரசினர் கழிவுக்கான உத்தரவுகளிலிருந்து எடுத்து எழுதவேண்டும். கலம் 1 முதல் கலம் 5 வரை
482 கிராமக் கணக்கு எண் 4-இல் காண்பிக்கப்படுவது. அனைத்து அரசினர் கழிவு
483 கிராமக் கணக்கு எண் 5 எத்தனைப் பிரிவுகளில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மூன்று பிரிவு
484 கிராமக் கணக்கு எண் 5(1) என்ற கிராம கணக்குகளை நீக்கிய அரசாணை எண் மற்றும் நாள்: அரசாணை எண் 223 வருவாய்த் துறை நாள் 7-7-2009
485 கிராமக் கணக்கு எண் 6-ஏ உள்ளடக்கம் எவ்வாறு தயார் செய்து யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும். மாதந்தோறும் தயார் செய்து வட்டாட்சியரிடம் ஒப்புதல் பெறவேண்டும்
486 கிராமக் கணக்கு எண் 8-ஏ. 8-பி என்பது? நீர்பாசன வருவாய் கணக்குகள்
487 கிராமக் கணக்கு எண் 8-ஏ 8-பி ஆகியவை தொகுக்கப்பட்டு யாருக்கு அனுப்பப்படுகின்றன. வருவாய் நிர்வாக ஆணையர்
488 கிராமக் கணக்குகள் அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்குமிடம் அலுவலகத்தில் மட்டும்
489 கிராமக் கணக்குகள் அனைத்தும் இது சம்பந்தப்பட்டவை. நிலம்
490 கிராமக்கணக்கு எண் 23 காண்பிப்பது கிராமத்தில் ரயத்துவாரி உரிமை முறையில் உள்ள பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையை காட்டுகின்றது
491 கிராமப் பஞ்சாயத்துக்களுக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் போன்றவற்றை பதிவு செய்பவர். கிராம நிர்வாக அலுவலர்
492 கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்? கிராம நிர்வாக அலுவலர்
493 கிராமப் புறம்போக்கில் உள்ள மரங்களை ஏலம் மூலம் வெட்டுவதற்கு அனுமதி அளிப்பவர் வருவாய் வளர்ச்சி அலுவலர்
494 கிராமத்தின் கணக்கு எண் 1 என்பது? கிராமத்தின் மாதவாரி சாகுபடி கணக்கு ஆகும்.
495 கிராமத்தின் மாதவாரி சாகுபடி கணக்கு. கிராமக் கணக்கு 12
496 கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி எந்த உடமைக்கு பொறுப்பாவார்? சாலைகள் வீதிகள் மற்றும் சதுக்கங்கள் திறந்த வெளியிடங்கள்
497 கிராமத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்தான ஒரு பதிவேட்டினை பராமரிப்பவர் கிராம நிர்வாக அலுவலர்
498 கிராமத்தில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு மின் இணைப்பு பெற கிராம நிர்வாக அலுவலர் பார்க்க வேண்டியது வீட்டு வரி ரசீது
499 கிராமத்தில் உற்பத்தி செய்யப்படும் கனிமங்களைப் பற்றி பதியும் ஆண்டுப் பதிவேடு. கிராமக் கணக்கு 24
500 கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் முக்கிய கடமை என்ன? தேவையான படிவங்களை வைத்திருக்க வேணடும் தனது அலுவலத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும் பிறப்பு இறப்பு நிகழ்வுகள் உரிய காலத்திற்குள் பதிவு செய்வதை உறுதி செய்திடல் வேண்டும்.
501 கிராமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பாகம் -2 பதிவேடு …… வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கும் பதிவேட்டுடன் சரி பார்க்க வேண்டும் ஜமாபந்தியின் போது
502 கிராமத்தில் அன்னியர்கள் நடமாட்டத்தை கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியப்படுத்துவது கிராம உதவியாளர்
503 கிராமத்தில் அமைந்திருக்கும் சாலைகள் சதுக்கங்கள் ஆகிய பொது மக்களால் உபயோகப்படும் நிலங்களில் தனி நபர் ஆக்கிரமிப்பு செய்யாதபடி பாதுகாப்பது …..ன் கடமை கிராம நிர்வாக அலுவலர்
504 கிராமத்தில் அரசின் பிரதிநிதியாகவும் கிராம மக்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றும் பணிகளில் ஈடுபடுபவர் கிராம நிர்வாக அலுவலர்
505 கிராமத்தில் பெய்த மழையின் அளவை பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் இவருக்கு அனுப்ப வேண்டும் வருவாய் ஆய்வாளர்
506 கிராமத்தில் பொதுமக்கள் அமைதியுடனும் சட்டம் ஒழுங்கு பாதிப்புகளின்றி வாழ்வதற்கு இவரின் பொறுப்பு மகத்தானது. கிராம நிர்வாக அலுவலர்
507 கிராமத்தில் ரயத்துவாரி உரிமை முறையில் உள்ள பலவகை மதிப்புள்ள கைப்பற்றுகளின் எண்ணிக்கையை காண்பிப்பது எது? கிராமக் கணக்கு 23
508 கிராமத்தில் உள்ள ஒருவர் நகை ரசீதை தவறவிட்டால் அதற்கு சான்று அளிப்பவர். கிராம நிர்வாக அலுவலர்
509 கிராமம் முழுமைக்கும் உள்ள நில வருவாய் நிர்ணய சுருக்கமாகும். முந்தைய பசலியின் விவரங்களையும் பதிவு செய்யப்படும் பதிவேடு. கிராமக் கணக்கு 12
510 கிராமம் முழுமைக்கும் உள்ள நிலவருவாய் நிர்ணய சுருக்கமாகும் இது கிராமக் கணக்கு எண் 12:
511 கிராமங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் பழுது ஏதேனும் ஏற்பட்டால் கிராம நிர்வாக அலுவலர் இவருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். வட்டாட்சியருக்கு
512 கிராமங்களில் உள்ள கால்நடைப் பட்டிகளுக்கு பொறுப்பு அலுவலாளர் இவர் கிராம நிர்வாக அதிகாரி
513 கிராமங்களில் உள்ள பொது கட்டிடங்கள் குறித்த பதிவேடை பராமரிப்பவர் கிராம நிர்வாக அலுவலர்
514 கிராமங்களில் தினசரி வசூல்களைக் காண்பிக்கும் கணக்கு. கிராமக் கணக்கு 13
515 கிராமங்களில் மழை மற்றும் புயல் சூறாவளி காலத்தின் போது தாழ்வான அல்லது இடர் நேரிடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்பவர். கிராம நிர்வாக அலுவலர்
516 கிராமங்களில் விவசாயிகள் வங்கிகளில் பெற்ற கடன்களை மற்றும் கடன் பாக்கிகளை கடன் பதிவேடு மற்றும் பாக்கி பட்டி ரொக்க பதிவேடை பராமரிப்பவர் கிராம நிர்வாக அலுவலர்
517 கிராமங்களில்….. சென்ட் நகராட்சி எல்லைக்குள் …… சென்ட் மாநகராட்சி எல்லைக்குள் …… சென்ட் என்ற அளவில் இலவச வீட்டுமனை நிலம் வழங்கப்படுகிறது. 3 1.50 1
518 கிணற்றின் மூலம் பாசன வசதி பெறுவது. நன்செய் நிலத்தைவிட மேலான தரம். நீர்ப்பாசன வசதி மண்ணின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. புன்செய்
519 கள்ளத்தனமாக வெட்டப்படும் 2-ஊ மரங்களை உரிய நடவடிக்கைக்குப் பின்பு 2-ஊ கணக்கிலிருந்து நீக்க வேண்டும்
520 கள்ளச்சாராயம் மறைக்கப்பட்டிருந்தால் குறிப்பிட்ட வீPடுகளில் சோதனையிட ஆயத்தீர்வை அலுவலர்களுக்கு சாத்தியமான உதவிகளைச் செய்பவர் கிராம நிர்வாக அலுவலர்
521 குற்றவியல் செயல் நடுவர் விசாரணையின் போது கிராம நிர்வாக அதிகாரியின் செயல்பாடு எது. உடனிருந்து ஏற்பாடுகளும் உதவிகளும் செய்தல் வேண்டும்.
522 குறிப்பிட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக வருவாய் துறை அளிக்கும் ஆவணத்தின் பெயர் என்ன? பட்டா
523 குறிப்பிட்டுள்ள இடத்தை மனைப் பிரிவுகளாகப் பிரித்து விற்பனை செயய மூலப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள உரிமையாளரால் நிலத்தை விற்பவருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது என்பதை எதன் மூலம் உறுதிபடுத்திக்கொள்ள முடியும்? அதிகாரப் பத்திரம் (பவர் பத்திரம்)
524 கல்லாங்குத்து மற்றும் மேடு என்ற நிலங்கள் எந்த வகை நிலங்களை குறிக்கும்? தீர்வை ஏற்படாத தரிசு
525 கலப்புத் திருமணம் செய்தவர்கள் ஒருமுறை உறுதிமொழி கொடுத்து சாதிச் சான்று பெற்ற பின்பு மறுமுனை வேறு சாதிச் சான்று பெற முடியர்து எனக் கூறும் அரசாணை எண் மற்றும் நாள். அரசாணை எண் 477 நாள்: 27-06-1975
526 கலப்புத் திருமணம் என்பது எந்த வகுப்பினரின் திருமணம் ஆதிதிராவிடர் வகுப்பு அல்லது பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பினர்
527 கலப்புத் திருமணச் சான்றினை வட்டாட்சியர் எத்தனை நாட்களில் வழங்கப்பட வேண்டும். 15 நாட்களில்
528 கலப்புத் திருமணச் சான்றினை வழங்குபவர். வட்டாட்சியர்
529 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்ச வயது 30 வயது
530 கணவனால் கைவிடப்பட்டவர் சான்று வட்டாட்சியரால் எவ்வளவு நாட்களில் வழங்கப்படுகிறது. 15 நாட்கள்
531 கணவரால் கைவிடப்பட்டவர் எனச் சான்று வழங்க அப்பெண் …… ஆண்டுகளுக்கு மேல் கணவரின் தொடர்பின்றி வாழவேண்டும். 5
532 பூமியில் புதைந்தில்லாத பொருள்: புதையல் அல்ல
533 பூமியில் மறைந்திருக்கும் nபாருள்களை எவ்வாறு கையாண்டு நடவடிக்கைகளை மேற்nகாள்ள வேண்டும் என்பது குறித்து கூறும் சட்டம் இந்திய புதைபொருள் சட்டம் 1897
534 பூமிதான இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது? ஆச்சார்ய வினோபாவே
535 பயிராய்வு பணியை மேற்கொள்ளும் கிராம நிர்வாக அலுவலர் புறம்போக்கு நிலங்களில் ஏதேனும் ஆக்ரமணம் செய்யப்பட்டதை கண்டறிந்தால் அதை எதில் பதிவு செய்ய வேண்டும்? அடங்கல்
536 பயிராய்வின் போது சர்வே கற்கள் உள்ள இடம் மற்றும் புறம்போக்கு நிலங்கள் உள்ள இடஙக்ளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ள உதவுவது? டி| ஸ்கெட்ச்
537 பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் எப்போது அமலுக்கு வந்தது? 1981
538 பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச்சட்டம் அமுலுக்கு வந்த ஆண்டு 14.11.1980
539 பகுதி நேர கிராம அலுவலர்கள் ஒழிப்புச்சட்டம் எண் 10ஃ80 மேதகு ஆளுநர் அவர்களால் ……. அன்று பிரகடனம் செய்யப்பட்டது 13.11.1980
540 பாக்கிதாரருக்கு அசையும் சொத்துகள் இல்லாவிடில் அவருடைய அசையா சொத்துகளை ஜப்தி செய்ய அனுமதிக்கும் சட்டப்பிரிவு (வருவாய் வசூல் சட்டம்) பிரிவு 25
541 பாக்கிதாரருடைய அசையும் அல்லது அசையா சொத்துகளை ஜப்தி செய்து பாக்கியை வசூலிக்கலாம். இதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் ….. பராமரிக்க வேண்டும். கட்டளை பதிவேடுகள்








