நடப்பாண்டு பிளஸ் 2 தேர்வு, வேதியியல் பாடப்பிரிவில் கேள்வி முறையிலிருந்து
மாறுபட்டு, பதிலளிக்கக் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக, கேள்வித் தாள்களில், திடீரென மாற்றம் கொண்டு
வந்ததால், எதிர்கால கனவுடன் தேர்வு எழுத சென்ற மாணவ - மாணவியர்
அதிர்ச்சியடைந்து உள்ளனர்.வரும், கல்வி ஆண்டில் கல்லுாரி வாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற,
மனஉளைச்சலில் உள்ளனர். நடப்பாண்டு சி.பி.எஸ்.சி., கணக்குப் பாடத்தேர்வு
பதிலளிக்க முடியாத வகையில் கடினமாக இருந்ததால், சி.பி.எஸ்.சி., வாரியம்
நிபுணர் குழு அமைத்து, தீர்வு காண முடிவு செய்துள்ளன.
வேதியியல் பாடம், மாணவர்களின் எதிர்கால வாய்ப்புகளுக்கு, மிக முக்கியமான பாடம். ஆகையால், தமிழக பள்ளிக்கல்வித் துறை, நடப்பாண்டு வேதியியல் தேர்வு குறித்து, நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, பிளஸ் 2 மாணவர்களின் திறனுக்கு அதிகமான கேள்விகள் இருக்குமானால், மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.