நன்னாடு, அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஸ்காட்லாந்து சிறுமலர்கள் அறக்கட்டளை, விழுப்புரம் ரோட்டரி சங்கம் மூலமாக ரூ. 3. 25 இலட்சம் மதிப்பிலான கணினிகள் வழங்கும் விழா.
மார்ச் 03, விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அரசு உயர்நிலைப் பள்ளியில், விழுப்புரம்
ரோட்டரி சங்கம் விழுப்புரம் ரோட்டரி கல்வி அறக்கட்டளை ஸ்காட்லாந்து சிறுமலர்கள் அறக்கட்டளை உதவியுடன்
ரூ. 3.25 இலட்சம்
மதிப்பிலான கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு
ரோட்டரி சங்கத் தலைவர் திரு. M . சிதம்பரநாதன்
அவர்கள் தலைமை தாங்கினார். ரோட்டரி
கல்வி அறக்கட்டளை தலைவர் திரு. J . வெங்கட்ரமணா
அவர்கள், செயலர்
திரு. S . சரவணக்குமார்
அவர்கள் மற்றும் பொருளாளர் திரு. M . சோமசுந்தரம் அவர்கள் ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.
விழாவில் நன்னாடு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சுபசாந்தி சுரேஷ்குமார் அவர்கள், நன்னாடு அரசினர் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. ச. ராஜாராம் அவர்கள், பரிக்கல் சிறுமலர்கள் தன்னார்வலர் திரு B . தண்டபாணி அவர்கள் ரோட்டரி சங்கத்தைச் சார்ந்த திரு. K . பாலகுருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவில் கல்வியாளர் திரு. E. சாமிக்கண்ணு அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றினை நட்ட பின்னர் சிறப்புரை நிகழ்த்தினார். விழுப்புரம் கம்பன் கழகம் திரு. மு. க. சங்கரன் அவர்களும் சிறப்புரையாற்றினார். ஸ்காட்லாந்து சிறுமலர்கள் அறக்கட்டளை மருத்துவர் திரு. B . விஜயன் அவர்கள், மருத்துவர் திருமதி சிந்தியா விஜயன் அவர்கள் மற்றும் திரு. தாமஸ் பாஷ்யம் அவர்கள் ரூ. 3.25 இலட்சம் மதிப்பிலான கணினிகளை நன்னாடு, கல்லப்பட்டு, அத்தியூர்திருக்கை, நல்லாப்பாளையம் ஆகிய அரசினர் உயர்நிலைப் பள்ளிகளுக்கும், எடப்பாளையம் மற்றும் வளவனூர் (மகளிர்) ஆகிய அரசினர் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் விழுப்புரம் ரோட்டரி சங்கம் மூலமாக வழங்கினார்கள். விழாவில் மேற்கண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக நன்னாடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் அமைத்துள்ள கணினி அறையை குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள். இவ்விழாவில் எடப்பாளையம் அ. மே. நி. ப. தலைமையாசிரியர் திரு. சரவணன், பெற்றோர் ஆசிரிய கழகத் தலைவர் திரு. சுரேஷ் குமார், ஊர் பெரியவர் திரு. அருட்பெருஞ்ஜோதி, மு. நாட்டாண்மை திரு. தட்சிணாமூர்த்தி, மு. ஊ. ம. தலைவர் திரு சங்கர், ஊ. ம. உறுப்பினர் திரு. வேல்முருகன், மு. ஒன்றிய கவுன்சிலர் ,திரு. பட்டு (எ) ஆறுமுகம், நன்னாடு ஊ. தொ. பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி தி. ஜ. புவனேஸ்வரி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சார்ந்த சிரஞ்ஜீவி, உயர்நிலைப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் திரு. க. இராம்குமார், திரு. தி. பரிமேலழகன், திருமதி. க. சித்ரா, திருமதி சூ. பெர்னத்மேரி, திரு. கோ.கஜேந்திரன், இளநிலை உதவியாளர் திரு. ர.புருஷோத்தமன், ஆய்வக உதவியாளர் திரு. மு.பாலாஜி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் திருமதி க.சுபாஷிணி விழாவினைத் தொகுத்து வழங்கினார். பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. முடிவில் ரோட்டரி சங்க செயலர் திரு K . முரளி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

தலைமை ஆசிரியர்