Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
உயர் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்: வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் பேச்சு:
நாட்டின் வளர்ச்சிக்கு, உயர் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்,'' என, வி.ஐ.டி., பல்கலையின் வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார். சென்னை, மியூசிக் அகாடமியில், வி.ஐ.டி., பல்கலை சார்பில், மத்திய பட்ஜெட் பற்றிய விவாத கருத்தரங்கம், நேற்று நடந்தது.
இதில், விசுவநாதன் பேசியதாவது:வி.ஐ.டி., பல்கலை, 15 ஆண்டுகளாக, மத்திய பட்ஜெட் சம்பந்தமாக கருத்தரங்கை நடத்தி வருகிறது. இதில், பொதுமக்கள் பயன் அடையும் வகையில், பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகளவில், இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.
நாட்டில், 50 ஆண்டுகளில், கல்வி, சுகாதாரத் துறைகளில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த துறைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்தியாவில், மருத்துவக் கல்விக்கான இடங்கள் போதிய அளவிற்கு இல்லை. இதனால், மருத்துவக் கல்விக்கு, ஐந்து லட்சம் பேர் விண்ணப்பிக்கும் நிலையில், 50 ஆயிரம் பேருக்கு தான் இடம் கிடைக்கிறது.
வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி படிக்கும் மொத்த மாணவர்களில், 70 சதவீதம் பேர் இந்தியர்கள். எனவே, இந்தியர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்வி பயில ஏற்பாடு செய்ய வேண்டும்.
நாட்டில், உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்த நிலையை மாற்றி, உயர் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். நாட்டில், ஊழல், வரி ஏய்ப்பு, கறுப்பு பணம் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, அனைவரும் பங்காற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பொருளாதார நிபுணர் குருமூர்த்தி பேசியதாவது:நாட்டில் பணப்புழக்கம் அதிகம் இருந்தால், பணவீக்கம் ஏற்படும். இதனால், பொருளாதார வளர்ச்சி தடைபடும். எனவே, பணப்புழக்கத்தை சீராக வைக்க வேண்டும். மத்திய பட்ஜெட்டில், வேளாண் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நாட்டின் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் எம்.பி., செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலர் பாலாஜி, த.மா.கா., துணைத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மா.கம்யூ., - எம்.பி., ரங்கராஜன் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








