WHAT IS LEAP YEAR ??? - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


WHAT IS LEAP YEAR ???

4 ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டுகளே லீப் வருடம் என்று நாமெல்லாம் படித்திருக்கிறோம். ஆனால், லீப் வருடம் என்பது இதற்கு மேலும் பல ஆழ்ந்த கணக்குகளை உள்ளடக்கியது.

ஒரு ஆண்டு என்பது பூமி சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலத்தை பொறுத்ததே. பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365.242 நாட்களாகின்றன. கணக்கிட எளிதாக இருக்கும் என்பதற்காக 365.25 நாட்கள் என கணக்கிடப்பட்டு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவர் மாதத்தில் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. எனவேதான் 4 ஆல் மீதியின்றி வகுபடும் ஆண்டுகள் லீப் ஆண்டுகள் என பெயரிடப்பட்டு பிப்ரவரி மாதம் 29 நாட்களாக கணக்கிடப்படுகிறது.

ஆனால், கணக்கு இதோடு முடிந்துவிடவில்லை. பூமி ஒரு முறை சூரியனை சுற்றி வர 365.24 நாட்கள் என்பது இதை விட துல்லியமான கணக்கு என்பதால் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் குறைக்கப்படுகிறது. எனவே 1700,1800,1900 போன்ற ஆண்டுகள் 4 ஆல் மீதியின்றி வகுபடும் என்றாலும் அந்த வருடங்கள் லீப் வருடங்கள் அல்ல; இந்த ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்திற்கு 28 நாட்களே.

கணக்கு மேலும் தொடர்கிறது; 

365.242 நாட்கள் என்பது மிக மிக துல்லிய கணக்கு என்பதால், 400 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் ஒருநாள் கூட்டப்படுகிறது. எனவே 1200, 1600, 2000 போன்ற ஆண்டுகளில் பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்களே. மொத்தத்தில் லீப் வருடத்திற்கான கணக்கு இதுதான்.ஒரு ஆண்டின் 4 இலக்குகளில் கடைசி 2 இலக்குகள் பூஜ்யமாக இல்லாவிடில் அந்த 2 இலக்குகளும் 4 ஆல் மீதியின்றி வகுபட்டால் அது லீப் வருடம்; பிப்ரவரி மாதத்திற்கு 29 நாட்கள். எடுத்துக் காட்டு; 1972, 1976, 1980, 1984 போன்ற வருடங்கள்.
ஒரு ஆண்டின் கடைசி 2 இலக்குகள் பூஜ்யமாக இருந்து அது 400 ஆல் மீதியிறி வகுபடா பட்சத்தில் அது லீப் ஆண்டல்ல; பிப்ரவரிக்கு 28 நாட்களே. எடுத்துக்காட்டு; 1700, 1800, 1900, 2100 போன்ற ஆண்டுகள். அதே சமயம் அது 400 ஆல் வகுபட்டால் அது லீப் ஆண்டு. எடுத்துக்காட்டு; 1600,2000 போன்ற ஆண்டுகள். 

ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும். 

தெரியாத விஷயம்: 

நூற்றாண்டுகள் வரும்போது அவை 400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது! 

லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:

பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர். 

முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.

நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.

ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753 க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொது மக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களை இழந்து விட்டதாக நினைத்தனர்!

1930 களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக( ஞாயிறு விடுமுறை) இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில் வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால், இந்த முறை, அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.

பழங்காலத்தில் லீப் வருடம்:

முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட். ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H