ஆளும் கட்சியான அ.தி. மு.க. எப்போதும் முன் கூட்டியே தேர்தல் அறிக்கையை வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த சட்ட சபை தேர்தலில் இன்னும் தனது தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க. வெளியிட வில்லை. அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் என்ன வாக்கு றுதிகள் இடம் பெறபோகிறது என்பதை அறிய அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வரும் 3-ந் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
அ.தி.மு.க. தேர்தல் அறிக் கையில் மக்களை கவரும் வகையில் பல இலவச திட்டங்கள் இடம் பெறலாம் என தெரிகிறது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு கூடுதல் வாக்குறுதிகள் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இதனால் அ.தி.மு.க.வினர் மத்தியில் தேர்தல் அறிக்கை குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. 2011 சட்டசபை தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை தாண்டி அம்மா உணவகம், குடிநீர், உப்பு, சிமெண்ட் என மக்களை கவரும் வகையில் பல திட்டங்களை செயல்படுத் தப்பட்டன.
அதே போல் பல புதிய திட்டங்கள் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.கவினர் தெரிவித்தனர்.








