மகாத்மா காந்தியின் உருவத்தை மணற்சிற்பமாக அழகாக வடித்திருக்கிறார் சுதர்சன்.
இதுவரை 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப போட்டிகளில் கலந்து கொண்டுள்ள சுதர்சன் பட்நாயக் இந்தியாவிற்காக பல விருதுகளை பெற்று தந்துள்ளார். இந்த சாதனைக்காக இவருக்கு சென்ற 2014-ம் ஆண்டு நாட்டின் 4-வது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.
ஒடீசாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் அங்குள்ள பூரி கடற்கரையில் மணற்சிற்பக்கலை பயிற்சிப் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.








