இதன் எதிரொலியாக, வேதியியலில் 6, இயற்பியலில் 2, கணிதத்தில் 4, வணிக கணிதத்தில் 10 என மொத்தம் 22 மதிப்பெண், கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டது.
இதுகுறித்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற அச்சுப்பிழையால் வேதியியல் தேர்வுக்கு மட்டும் 22 மதிப்பெண் கருணையாக வழங்கப்பட்டது.
அதன்பின் பல ஆண்டுகள் தொடர்ந்து சில மதிப்பெண்கள் மட்டுமே கருணை அடிப்படையில் வழங்கப்பட்டன. ஆனால் இந்தாண்டு அதிகபட்சமாக 22 மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது.
வினாத்தாள் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும். அனுபவம் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும்.
கல்லுாரி ஆசிரியர்களை தவிர்க்கலாம். 0.25 'கட்ஆப்' மதிப்பெண் வித்தியாசத்தில் கூட பொறியியல், மருத்துவ படிப்பு சேர்க்கை வரிசையில் ஆயிரம் மாணவர்களுக்கு பின்தங்கும் வாய்ப்புள்ளது. இதனால் அச்சுப்பிழை மற்றும் தவறு இல்லாமல் வினாத்தாள் தயாரிப்பதில் தேர்வுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.








