மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

Best TET Coaching Center n Chennai

Join our WhatsApp Channel
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE

 


ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே.. 

ONLINE TEST CLICK HERE 


10,11,12 Public Exam Preparation March-2026

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்:

வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதில் தலைமையாசிரியர்கள் தனிக் கவனம் செலுத்தவும், அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகளைக்கொண்டு பெற்றோரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும், கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில், மூடும் நிலைக்கு தள்ளும் பெரும் பிரச்னைகளுள் ஒன்று, மாணவர் எண்ணிக்கை சரிவு, ஒவ்வொரு கல்வியாண்டிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க கல்வித்துறை புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டாலும், பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவை நோக்கியே செல்கிறது.
நடப்பாண்டிலும் இதேநிலை தொடராமல் இருக்க, தனிக் கவனம் செலுத்த வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் கடந்தாண்டு சேர்க்கையை விடவும் பத்து சதவீதம் அதிகரிப்பதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு வழங்கிடும் நலத்திட்டங்கள், ஆங்கிலவழிக்கல்வி, கடந்த கல்வியாண்டில் தங்கள் பள்ளி பெற்ற தேர்ச்சி சதவீதம், முன்பு பயின்ற மாணவர்கள் அடைந்திருக்கும் சிறப்பான அடைவுகள், விளம்பர போஸ்டர்கள் ஓட்டுவது, பேனர் வைப்பது, நோட்டீஸ் வினியோகிப்பது உள்ளிட்ட பணிகளை நடத்தலாம் எனவும், இப்பணிகள் அனைத்தையும் தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு நடத்தவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பின்பற்றிய நடவடிக்கைகளுக்கான அறிக்கை மற்றும் புகைப்படம் தயார்நிலையில் இருக்க வேண்டும். தவிர, இமெயில் செய்திகளை நாள்தோறும் அவ்வப்போது பார்வையிட்டு, முக்கிய செய்திகளுக்கு உடனடியாக பதில் அளிக்க வேண்டும்.
அடிப்பட வசதிகள் கட்டாயம்
மாணவர்களுக்கான பாடநுால் வழங்கும் பதிவேட்டை முறையாக பராமரித்தல் அவசியம். விடுமுறை நாட்களில் கரும்பலகைகளுக்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் குடிநீர், கழிப்பறை வசதிகளை மேம்படுத்தியிருக்க வேண்டும். மாணவர்களின் தனித்திறன், விளையாட்டு, அறிவியல் மற்றும் கணிதத்திறன்களை மேம்படுத்தும் வகையில் பயிற்சியளித்தல் வேண்டும். மாணவர்களுக்கான இருக்கை வசதிகளை சோதனை செய்திருக்க வேண்டும்.
பள்ளி முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வரும் கல்வியாண்டில் தங்கள் பள்ளியின் சிறந்த அடைவுகளை அடைய, பள்ளிநிர்வாகத்தினர் வகுத்திருக்கும் திட்டங்கள் குறித்து அறிக்கை தயார் செய்திருக்க வேண்டும். மாணவர்களுக்கான பஸ் பாஸ் வசதிகளை ஏற்பாடு செய்தல், மதிய உணவின் தரம் குறித்து தலைமையாசிரியர்கள் ஆய்வு நடத்தி அதன் மாதிரி எடுத்து வைத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்த காரணத்துக்காகவும் விதிகளுக்கு புறம்பாக தொகை வசூலிக்கக்கூடாது. இவ்வாறு கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இவ்வாறு, கோவை மாவட்ட கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பபட்டு வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கு எந்த தகவலும் வராதது இங்குள்ள பள்ளி நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H