மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, அவருடைய பெயரை குறிக்கும் வகையில், இந்த ஏவுகணைக்கு, 'கே - 4' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்ட சோதனைகளுக்குப் பின், அடுத்த ஆண்டு, இந்த ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இதுபோன்ற ஏவுகணைகளை கொண்ட, ஆறாவது நாடாக இந்தியா விளங்கும். உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, ஐ.என்.எஸ்., அரிஹந்த் எனப்படும் நீர்மூழ்கி, கப்பலில் இருந்து, இந்த ஏவுகணை, அரபிக் கடலில் ஏவி சோதிக்கப்பட்டது.








