ஐஐடி-களில் கட்டண உயர்வு தொடர்பாக பரிசீலிக்க தனிக் குழுவை மத்திய மனித வள அமைச்சகம் அமைத்திருந்தது. இந்தக் குழு தனது அறிக்கையைத்
தயாரித்து மத்திய அரசிடம் வழங்கியது.
இதைத் தொடர்ந்து தற்போது ரூ.90 ஆயிரமாக உள்ளது பயிற்றுக் கட்டணம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருந்த மாணவர்களுக்கு, இந்தக் கட்டண உயர்வு 2016-17-ம் கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்படும் என்று அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது மத்திய மனித வள அமைச்சகம்.
ஆனால் ஏற்கெனவே ஐஐடி-களில் இணைந்து படித்து வரும் மாணவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தாது. அவர்கள் பழைய கட்டணத்தையே செலுத்தி படிக்கலாம். ஆனால் 2016-17-ம் ஆண்டில் புதிதாகச் சேரும் மாணவர்கள் புதிய கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று மத்திய மனித வள அமைச்சகம் தெரிவித்துள்ளது.








