ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்கள், தங்கள் மொபைல் போனில், 'டிவி' நிகழ்ச்சிகளை இனி, காண முடியும்.நான்கு மெட்ரோ நகரங்கள் உட்பட,16 நகரங்களில், துார்தர்ஷனின், 'டிஜிட்டல் டெரஸ்டிரியல் டெலிவிஷன்' சேவை, சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சென்னை, டில்லி, மும்பை, கோல்கட்டா, கவுகாத்தி, பாட்னா, ராஞ்சி, கட்டாக், லக்னோ, ஜலந்தர், ராய்ப்பூர், இந்துார், அவுரங்காபாத், போபால், பெங்களூரு மற்றும் ஆமதாபாத் ஆகியநகரங்கள் மற்றும் அதற்கு அருகில் வசிப்போர், இந்த வசதியை பெறலாம்.ஓ.டி.ஜி., வசதியுள்ள ஸ்மார்ட் போன் மற்றும், 'டேப்லெட்'களில், 'டி.வி.பி., - டி2' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'டிவி' நிகழ்ச்சிகளை காணலாம். சீரான அலைவரிசைக்கு தேவையான மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பஸ், ரயில்களில் பயணம் செய்யும்போது, 'வை - பை' மூலம் இந்த சேவையை பயன்படுத்தலாம்.