பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் இலவசமாக பதிவுசெய்யும் வகையில் சென்னையில்
உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த
மையத்தில் ஆன்லைன் பதிவு தொடர்பான விவரங்களை மாணவர்கள் தொலைபேசி மூலமாகவும்
அறிந்துகொள்ளலாம்.
பொறியியல்
படிப்புக்கான பொது கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி
வருகிறது. இந்த ஆண்டுபொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் மட்டும்
பதிவுசெய்யும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கான ஆன்லைன்
பதிவு ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. அரசு இ-சேவை மையங்களிலும் பொறியியல்
படிப்புக்கு ஆன்லைனில் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த
நிலையில்,பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் இலவசமாகப் பதிவுசெய்ய சென்னை
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 9 மணி முதல் இயங்கும்.