பொறியியல் படிப்பில் சேர ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நேற்று
தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக இணையதள சர்வர் செயல் இழந்ததால் மாணவர்கள்
பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
பொறியியல் படிப்பு
கடந்த
வருடம் வரை பி.இ., பி.டெக். பொறியியல் படிப்பில் சேர்வதற்கான
விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60
மையங்களில் கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப
படிவங்கள் கிடையாது, ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அண்ணா
பல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம் அறிவித்து இருந்தார்.
ஏப்ரல்
15-ந் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொண்டு, பிளஸ்-2 முடிவு
தெரிந்தபின்னர் அந்த மதிப்பெண்களை ஏற்கனவே பதிவு செய்ததில் இணைத்து அண்ணா
பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.
மாணவர்கள் ஏமாற்றம்
அதன்படி
நேற்று ஆன்லைனில் பதிவு செய்ய தமிழ்நாடு முழுவதும் பொறியியல் படிப்பில்
சேர ஆர்வமாக உள்ள லட்சகணக்கான மாணவ- மாணவிகள் முயன்றனர். ஆனால் அண்ணா
பல்கலைக்கழக இணைய முகவரி மட்டும் கிடைத்ததே தவிர விண்ணப்பிப்பதற்கு தேவையான
வசதிகள் அதில் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் என்ன
செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
ஆன்லைனில்
தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற தகவல் தெரியாத பல ஊர்களை சேர்ந்த ஏராளமான
மாணவ-மாணவிகள் பெற்றோருடன் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்ப படிவம்
வாங்க வந்தனர். அங்கு விசாரித்த பின்னரே ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க
வேண்டும் என்ற தகவலை தெரிந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சர்வர் வேலை செய்யவில்லை
ஆன்லைனில்
சர்வர் வேலை செய்யாததாலேயே விண்ணப்ப பதிவு செய்ய முடியவில்லை என்று
தெரிந்துகொண்ட ஏராளமான மாணவர்களும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்தனர்.
அவர்கள் சர்வர் வேலை செய்யவில்லையே என்று ஊழியர்களிடம் கேட்டதற்கு, அவர்கள்
சரியான பதிலை தெரிவிக்கவில்லை.
பின்னர்
அங்குவந்த அண்ணா பல்கலைக்கழக அதிகாரி ஒருவர் அந்த மாணவர்களிடம், ‘மாலை 5
மணிக்கு சர்வர் வேலை செய்யும். அதன் பின்னர் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்’
என்றார்.
சரிசெய்யப்பட்டது
துணைவேந்தர்
மு.ராஜாராம், பதிவாளர் எஸ்.கணேசன், பேராசிரியர்கள் நாகராஜன், இந்துமதி
ஆகியோர் சர்வர் பிரச்சினையை சரி செய்ய ஏற்பாடு செய்தனர். நேற்று மாலை 6 மணி
அளவில் சர்வர் சரி செய்யப்பட்டது. அதன் பின்னர் மாணவ-மாணவிகள் தங்கள்
பதிவை தொடங்கினார்கள்.
இவர்கள் பிளஸ்-2 தேர்வு
முடிவு வெளியான பிறகு மதிப்பெண்களை பதிவு செய்த விண்ணப்பத்தில் சேர்த்து
அதை பதிவிறக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
இ சேவை மையங்களில்
அண்ணா
பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் கூறுகையில், ‘இன்று (சனிக்கிழமை) முதல்
கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில்
உள்ள இ.சேவை மையங்களில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பித்தல் தொடர்பான சந்தேகத்தை போக்க அண்ணா
பல்கலைக்கழக வளாகத்தில் உடனடியாக சில கவுண்ட்டர்கள் திறக்கப்படுகிறது’
என்றார்.
விண்ணப்பிக்க வரும் மாணவர்களை திருப்பி
அனுப்புவதைவிட, அண்ணா பல்கலைக்கழகத்திலேயே விண்ணப்பத்தை பதிவு செய்வதற்காக
10 கம்ப்யூட்டர்கள் ஏற்பாடு செய்தால் வசதியாக இருக்கும் என்று மாணவர்கள்
தெரிவித்தனர்.