அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு செவிமடுக்காத
ஆட்சியாளர்களை இரு செவி கொடுத்து கேட்க வைக்க- நமது 100% தபால் ஓட்டுகள்
தேவை.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இயக்க நடவடிக்கைகளுக்கு செவிமடுக்காத
ஆட்சியாளர்களை இரு செவி கொடுத்து கேட்க வைக்க- நமது 100% தபால் ஓட்டுகள்
தேவை.
இம்முறை நமது வாக்குரிமையை இழந்தோமானால்...
இழப்பதற்கு வேறொன்னும் இல்லா நிலையை ஆட்சியாளர்கள் விரைவில் ஏற்படுத்திவிடுவார்கள்.
கடந்த தேர்தலில் பெருவாரியான ஆசிரியர்கள் தபால் வாக்குரிமையை இழந்தது போல் இந்த முறை நடந்துவிடக் கூடாது தோழர்களே.
எனவே
நாளை தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் தயவுசெய்து
தங்களின் வாக்காளர் அட்டை எண், சட்டமன்ற தொகுதி, பாகம் எண், வரிசை எண்
ஆகியவற்றை குறித்து எடுத்துச்செல்லவும் .
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை type செய்து
1950 என்ற எண்ணிற்கு SMS
அனுப்புங்கள் உடனே உங்கள் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆவகியவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் இலவசமாக பெறலாம்
நமது வாக்குகள் நமக்கே வாய்க்கரிசிகளாய் மாறிவிடக்கூடாது தோழர்களே
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பலத்தை மறந்த (குறைத்து எடை போட்ட) ஆட்சியாளர்களுக்கு இனி என்றும் மறவாத படி செய்திடுவோம்
-இவண்
வாக்காளர் தேவராஜன், தஞ்சாவூர்