நேதாஜியின் இறுதி நாட்கள் தொடர்பான மேலும், 25ஆவணங்களை, மத்திய அரசு
வெளியிட்டது. சுதந்திர போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின், இறுதி
நாட்கள் தொடர்பான சர்ச்சை இருந்து வரும் நிலையில், அது தொடர்பான ரகசிய
ஆவணங்களை மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில் மேலும், 25
ஆவணங்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து,
மத்திய கலாசாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியதாவது:பிரதமர் அலுவலகம்
மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து, தலா ஐந்து ஆவணங்களும், வெளியுறவு
அமைச்சகத்திடம் இருந்து, 15 ஆவணங்களும் வெளியிடப்பட்டன. மக்களின்
கோரிக்கையை ஏற்று, நேதாஜிக்கு டில்லியில் நினைவிடம் அமைக்கப்படும்இவ்வாறு
அவர் கூறினார்.