தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கான ஆட்சியர்கள் மற்றும் 2 மாவட்ட
எஸ்.பி.க்களை பணி இடமாற்றம் மாற்றம் செய்து தேர்தல் ஆணையம்
உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கரூர், திருவாரூர்,
திருவண்ணாமலை நெல்லை, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டத்தின் ஐஏஎஸ் அதிகாரிகள்
அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்ட ஆட்சியராக காக்கர்லா உஷாவும், திருவாரூர் மாவட்ட
ஆட்சியராக வெங்கடேஷ், திருவண்ணாமலை ஆட்சியராக பூஜா குல்கர்னியும், நெல்லை
ஆட்சியராக சமயமூர்த்தியும், புதுக்கோட்டை ஆட்சியராக ஸ்வர்ணாவும்
நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் தேர்தல் ஆணையம்
மாற்றியுள்ளது. ஈரோடு மாவட்ட எஸ்பி.,யாக ரூபேஷ் குமார் மீனாவும், தஞ்சாவூர்
மாவட்ட எஸ்பி.யாக சுதாகரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தலுக்கான புதிய டிஜிபி.,யாக கே.பி மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.