தமிழ்நாடு வேளாண் பல்கலை யில், 2016 - 17ம் கல்வியாண்டு இளங்கலை மாணவர்
சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி
துவங்குகிறது.பல்கலை துணைவேந்தர்ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு
வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி
அறிவிப்பு வெளியிடப்படும். மொத்தம், 2,600இடங்களுக்கு அரசு விதித்த
விகிதாச்சாரப்படி, 65 சதவீதம் அரசுக்கும், 35சதவீதம் தனியார்
கல்லூரிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மே, 12ம் தேதி முதல்
ஜூன், 11ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தரவரிசை
பட்டியல், ஜூன், 20ல் வெளியிடப்படும். சிறப்பு, ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு
ஜூன், 27, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. முதற்கட்ட கலந்தாய்வு,ஜூலை, 4
முதல், 10ம் தேதி வரையும், தொழில் கல்விக்கான கலந்தாய்வு ஜூலை, 13ம்
தேதியும்,வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு, ஜூலை, 15, 16ம்
தேதிகளும் நடக்கிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, 25 முதல் 28ம் தேதி
வரை நடக்கிறது. தேவைப்பட்டால் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
சேர்க்கை
தேதிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது. அரசு மட்டுமின்றி, தனியார்
இடஒதுக்கீடுக்கும் விண்ணப்பம் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில்,
திருநங்கைகளுக்கும் தனி இடஒதுக்கீடு உள்ளது. இதர பிரிவினர், 600 ரூபாயும்,
எஸ்.சி., எஸ்.டி.,பிரிவினர், 300 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக செலுத்த
வேண்டும்.இவ்வாறு, துணைவேந்தர் ராமசாமி கூறினார்.
மாணவர்கள்,www.tnau.ac.in/admission.htmlஎன்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு,ugadmissions@tnau.ac.inஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும், 0422
6611345/46 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.