மனை வணிக (ரியல் எஸ்டேட்) துறையில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும்
நோக்கில், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மனை வணிகச் சட்டம் ஞாயிற்றுக்கிழமை
(மே 1) முதல் அமலுக்கு வருகிறது.இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை
வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மனை
வணிகச் சட்டத்தில் உள்ள அம்சங்களை 6 மாதங்களுக்குள் அனைத்து மாநிலங்களும்,
யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்த வேண்டும். கட்டுமானத் திட்டங்களில்
காலதாமதம் ஏற்படாமல், குறிப்பிட்ட நேரத்துக்குள் குடியிருப்புகள் உள்ளிட்ட
கட்டடங்களை கட்டுமான நிறுவனங்கள் கட்டிமுடிப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
உறுதி செய்ய வேண்டும்.கட்டுமானத் திட்டங்கள் தொடர்பான வழக்குகளில்,
மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் 60 நாள்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும்
என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான
நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குடியிருப்புகளை
கட்டிக்கொடுப்பதில் தாமதம் ஏற்படாமல் தடுப்பதற்கும், கணக்கில் வராத பணத்தை
மனை வணிகத்தில் முதலீடு செய்வதைத் தடுப்பதற்கும் மனை வணிகச் சட்டம்
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.